காபி தூளில் நிறைந்து இருக்கும் அழகு ரகசியம்
காபியில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ளது. இது ஸ்கின்னை இயற்கையான முறையில் பாதுகாக்கிறது.
நம்மில் பெரும்பாலானோர் காபி பிரியர்களாக தான் இருப்போம். உணவே இல்லையென்றாலும், காபியை எரிபொருளாகக் கொண்டு நமது உடல் இயங்கும். காபியை பசி அடக்குவானாகத் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அதில் இருக்கும் பியூட்டி பிராப்பர்டிகளைப் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது. எந்தெந்த வகைகளில் எல்லாம் காபியை பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
ஸ்கிரப்
காபி பொடியில், சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் வட்டமாக மசாஜ் செய்வதால், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.
காபி பொடியுடன் ரோஸ் வாட்டர் கலந்தும் ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம்.
முகம் பளிச்சென மாற
காபி தூளை சிறிதளவு பால் சேர்த்து கெட்டியான பேஸ்டாக்கிக் கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி முகம் பிரகாசமாகும்.கண்களில் வீக்கம் குறைய
நீங்கள் ஒவ்வொரு முறை காபி போடும் போதும், வடிகட்டிய தூளை கண்களின் மீது 10-15 நிமிடம் வைக்கவும். இதனால் உங்கள் கண்களின் வீக்கம் குறையும்.
பாடி ஸ்கிரப்
ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரையுடன் கொஞ்சம் காபியை கலந்து, குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் அப்ளை செய்யவும். உங்கள் ஸ்கின் டைப்பைப் பொறுத்து தினமும் கூட இதைப் பயன்படுத்தலாம்.
ஸ்கால்ப் ஸ்கிரப்
சிறிதளவு காபி தூளை, ஈரமான தலையில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் மைல்டான ஷாம்பு கொண்டு முடியை அலசி விட வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, தலை முடி நன்றாக வளரும்.