ஆரோக்கியம்புதியவை

ஒரே நிமிடத்தில் கால்வலியை போக்க இதை செய்யுங்க

நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்கு அதிகமாக நடப்பவர்களுக்கும் காலில் அதிகவலி உண்டாகும். இதனால் நடப்பதற்கு கூட அதிக சிரமமாக இருக்கும்.

இந்த கால்வலியினை தவிர்ப்பதற்கு சில எளிய வழிகளை கையாளலாம். இதனால் பாதங்கள், கால்களில் ஏற்படும் வழிகள் நிமிடத்தில் குறைவதோடு புத்துணர்ச்சியும் உண்டாகும்.

விரல்களை உயர்த்துதல்

செருப்புகளை கழற்றிவிட்டு காலை நன்கு தரையில் பதித்து நின்று கொள்ளவேண்டும். கட்டை விரலை உயர்த்தவேண்டும். பின் சுண்டுவிரலை உயர்த்தவேண்டும். இதே போன்று 5 முறை ஒவ்வொரு காலிலும் செய்தல் வேண்டும்.

பாதங்கள் மற்றும் கால்விரல்களில் அழுத்தம் கொடுத்தல்

தரையில் அமர்ந்து காலைகளை நீட்டி முன்னங்காலினை மென்மையாக பின்னோக்கி இழுக்கவேண்டும். இதனை ஒரு முறை செய்வதே போதுமானது.

டென்னிஸ் பந்தினை பயன்படுத்துதல்

கால் பாதங்களில் அதிக வலி இருக்கும் போது டென்னிஸ் பந்தினை கால் பாதங்களின் அடியில் வைத்து கொண்டு முன்னும் பின்னும் உருட்டவேண்டும். இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகி கால்களில் வலி குறைகிறது.

குதிகாலை உயர்த்துதல்

தரையில் பாதங்களை அழுந்த பதித்து நின்று கொண்டு முன்னங்காலை ஊன்றி குதிகால்களை உயர்த்தவேண்டும். இதே போன்று 10 முறை செய்தால் கால்வலி குறையும்.

கணுக்காலில் அழுத்தம் கொடுத்தல்

தரையில் படுத்து கொண்டு காலின் பாதங்களுக்கு அடியில் ஒரு உடற்பயிற்சி பந்தினை வைத்து பாதங்களை கொண்டு அதில் மெதுவாக அழுத்தம் கொடுக்கவேண்டும். இதனை தொடர்ந்து 15முறை செய்யவேண்டும். இதன் மூலம் கணுக்காலில் அழுத்தம் கொடுக்கப்பட்டு கால்வலி குறையும்.

சரியான காலணிகளை அணிதல்

கால்களில் வலியினை குறைப்பதற்கு நாம் சரியான காலணிகளை தேர்ந்தெடுப்பது கட்டாயமாகும். குதிகால்கள் உயர்ந்த காலணிகளை தவிர்ப்பதன் மூலம் பாதங்களில் ஏற்படும் வலி குறையும்.

யோகாசனம்

தினமும் யோகா செய்வதன் மூலம் உடலானது சமநிலைப் படுத்தப்பட்டு புத்துணர்ச்சி அடையும்.

உப்பு நீரில் கால்களை வைத்தல்

சிறிது நீரில் எப்சம் உப்பினை கலந்து அதில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தாலும் கால் வலியானது குறையும்.

வெறும் காலுடன் நடத்தல்

தரையில் வெறும் காலுடன் நடக்கும் போது இரத்த ஓட்டமானது சீராக வலி குறையும். கூழாங்கற்களின் மீது வெறுங்காலுடன் நடப்பது நல்ல பயனை அளிக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker