அழகு..அழகு..புதியவை

இளநரையை மறைக்க வேண்டுமா? கவலை விடுங்க.. இந்த பொருட்களில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும்!

இன்றைக்குப் பலருக்கும் தலைமுடி பிரச்னைதான் இளநரை. இதனால் ஆண், பெண் இரு பாலினருமே பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இதற்காக என்னென்னவோ சிகிச்சைகளைச் செய்து பார்த்தாலும், பலன் மட்டும் கிடைப்பதில்லை என்று பலரும் புலம்புவார்கள்.

இதற்கு சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை போன்றவை முக்கிய காரணங்காளாக இருக்கிறது. முடிக்கு போதிய பாராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்கு அதிகம் பணம் செலவழிக்க அவசியமில்லை. ஒரு சில இயற்கை பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • உருளைக்கிழங்கு தோலை எடுத்து 2 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் இதை இறக்கி உருளைக்கிழங்கு தோல் வேகவைத்த நீரை வடிகட்ட அனுமதிக்கவும். இதை கூந்தலில் ஸ்கால்ப் பகுதியில் அவ்வபோது தடவி குறிப்பாக இளநரை இருக்கும் பகுதியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசுங்கள்.
  • நெய் இலேசாக சூடு செய்து கூந்தலில் குறிப்பாக இளநரை இருக்கும் பகுதியில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்து வந்தால் பலன் தெரியக்கூடும்.
  • 3 டீஸ்பூன் அளவு காஃபித்தூள் எடுத்து 150 மில்லி தண்ணீருடன் கலக்கவும். இது அடர்ந்து சேர்ந்து வரும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி ஆறவிடவும். இவை குளிர்ந்த பிறகு உங்கள் கூந்தலில் தடவி விடவும். நரை இருக்கும் பகுதியில் நன்றாக இரண்டு முறை தடவி முடியை 50 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு கூந்தலை அலசி எடுக்கவும்.
  • சுத்தமான தேங்காயெண்ணெயை சூடாக்கி அதில் நெல்லித்தூளை சேர்த்து கொதிக்க வைத்து சூடாக்கி இறக்கவும். ஆறியதும் அதை கூந்தல் முழுக்க ஸ்கால்ப் முதல் நுனிவரை தடவி 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு குளிர்ந்த நீரில் கூந்தலை அலசி எடுக்கவும். உங்களுக்கு இளநரை தாக்கம் அதிகமாக இருந்தால் தாமதிக்காமல் வாரம் இருமுறை அல்லத் மும்முறை பயன்படுத்திவந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker