உலக நடப்புகள்புதியவை

மகரம் செல்லும் சூரியனால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ஒருவரது தலைவிதியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை சூரியனின் நிலை கொண்டுள்ளது. ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். சூரியனின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

மேலும் சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமாக தை மாதம் பிறக்கிறது. இப்படி மகரம் செல்லும் சூரியனால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என தை மாத ராசிப் பலனை இப்போதுக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இந்த பெயர்ச்சியின் போது பத்தாவது வீட்டிற்கு செல்கிறார். இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக, நல்ல முடிவுகளைத் தருவதாக இருக்கும். தொழில் ரீதியாக இந்த பெயர்ச்சி, உங்கள் தொழிலில் வளர்ச்சி மற்றும் வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது சூரியன் 3 கிரகங்களுடன் பரஸ்பரத்துடன் இணைந்திருப்பதால், உங்கள் திறமைகளை வேகமாக மேம்படுத்துவீர்கள் மற்றும் எதையும் விரைவில் கற்றுக் கொள்வீர்கள். பணியிடத்தில் சிறந்து விளங்க பல வாய்ப்புக்களும் கிட்டும். நீண்ட காலமாக விரும்பிய வேலையில் மாற்றத்தைப் பெற நினைப்பவர்கள் இக்காலத்தில் பெறுவார்கள். வர்த்தகர்கள் இக்காலத்தில் சாதகமான வாய்ப்புக்களைப் பெறவும், வருமானம் உயரவும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவராக இருந்தால், உங்கள் குழந்தையின் வளர்ச்சியும், முன்னேற்றமும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இருப்பினும், இந்த காலத்தில் அவர்களின் உடல்நலம் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். மொத்தத்தில், இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், இந்த பெயர்ச்சியின் போது 9 ஆவது வீட்டிற்கு இடம் பெயர்கிறார். இதனால் இந்த ராசிக்காரது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே இந்த காலத்தில் உங்கள் தாயாருடன் இருக்க முயற்சி செய்து, அவருக்கு உதவ முயலுங்கள். உங்கள் மனைவி அல்லது காதலியுன் இக்காலத்தில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிலைமை மோசமாகாமல் இருக்க அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு வெகுமதிகளையும், வருமானத்தையும் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் பிடிவாதமும், அணுகுமுறையும், உடன் பணிபுரிபவருடன் சில வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இக்காலத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதற்கு, உங்கள் அணுகுமுறையில் கொஞ்சம் நெகிழ்வாக இருங்கள். நிதி ரீதியாக, பண வருகை நன்றாக இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகளவில் இருக்கும். இதை தவிர்க்க வேண்டுமானால் எல்.ஐ.சி போன்றவற்றில் பணத்தைப் போடுங்கள். உங்கள் தந்தையின் கருத்துக்களைக் கேட்டு நடத்து கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் இடம் பெயர்கிறார். சூரியனின் இந்த நிலையால் உங்கள் தொழில்முறை முயற்சிகளில் வெற்றிபெற வழக்கத்தை விட அதிக முயற்சிகள் செய்ய வேண்டும். மேலும் உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் போது கவனமாக இருங்கள். பணியிடத்தில் சிறிது அதிருப்தியை உணரலாம். இருப்பினும், இக்காலத்தில் எவ்வித வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். ஆராய்ச்சி, தரவு பகுப்பாய்வு போன்ற வேலைகளில் உள்ளவர்கள் இந்த பெயர்ச்சியால் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் அதிக வருமானத்தை ஈட்டுவது மிகவும் கடினமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளலாம். உங்கள் மாமியாருடனான உங்கள் உறவு உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கக்கூடும். எனவே பேசும் போது கவனமாக பேசுங்கள். இந்த காலத்தில் உங்கள் உடன் பிறப்புக்கள், அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அடிவயிற்றுப் பகுதி அல்லது முழங்கால் பகுதிகளில் பிரச்சனைகளை சந்திக்கலாம். முக்கியமாக நடக்கும் போது அல்லது வண்டியில் பயணிக்கும் போது கவனமாக இருங்கள்.

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் இடம் பெயர்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கலாம். உங்களின் தனிப்பட்ட உறவுகளில் மன அழுத்தமும், பதற்றமும் அதிகரிக்கக்கூடும். தொழில் ரீதியாக, விஷயங்கள் பிரகாசமாக இருந்தாலும், அதிகார பதவிகளுக்கு உயர பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். இக்காலத்தில் வணிகம் காரணமாக நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதனால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு வயிறு தொற்று மற்றும் சரும வறட்சி போன்றவற்றையும் சந்திக்கக்கூடும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளை வழங்கக்கூடியதாக இருக்கும். இக்காலத்தில் அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதிகம் கஷ்டப்படாமல் தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, வேலைகளை மாற்ற விரும்புபவர்களுக்கு மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதைய வேலையை தொடர நினைப்பவர்களுக்கு, வேலையில் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். வணிகர்கள், இக்காலத்தில் நல்ல வருவாயை ஈட்ட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள். மேலும் இக்காலம் முந்தைய நிலுவைத் தொகையையும் கடன்களையும் அடைக்க சிறந்த காலம். அதோடு நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செல்லும் சூரியனால், இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமானதாக இருக்காது. எந்தவொரு பயணங்களும் அல்லது நீண்ட தூர பயணங்களும் தவிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நிதி அடிப்படையில் தேவையற்ற மன அழுத்தத்தை அல்லது சுமையை உங்களுக்குத் தரக்கூடும். பணியிடத்தில் முன்னோடியில்லாத சில சூழ்நிலைகள் உங்களை வேலை பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்த கவலையையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பூர்வீகவாசிகள் இந்த போக்குவரத்தின் போது சாதகமான முடிவுகளைப் பெறக்கூடும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை அளிக்கக்கூடியதாக இருக்கும். உறவுகளில் இருப்பவர்கள் உங்கள் துணையுடன் தொடர்புகொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரைப்பை அல்லது அசிடிட்டி பிரச்சினைகள் போன்ற வயிற்று தொடர்பான பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான மற்றும் சுவாரஸ்யமான முடிவுகளைத் தரும். சூரியன் பலவீனமான நிலையில் இருப்பதால், தாயின் ஆரோக்கியத்தில் சரிவைக் காணலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஈகோ மோதல்கள் இருக்கக்கூடும். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு சிறந்த நட்புறவை உருவாக்க, அவர்களுடன் சேர்ந்து ஒரு சுற்றுலாவைத் திட்டமிடுங்கள். சிலர் சொத்து விற்பனை, கொள்முதல் மற்றும் வாடகை மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பிபி, இதய நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தினமும் சுவாச பயிற்சி மற்றும் பிராணயாமம் போன்றவற்றை செய்வான் மூலம், ஆரோக்கியத்தில் சாதகமான முடிவுகளைப் பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் மூன்றாவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இக்காலம் எந்தவொரு முயற்சியும், வெற்றிகளையும் வளர்ச்சியையும் வழங்கக்கூடும் என்பதால் இது இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல காலமாகும். இந்த காலத்தில் உங்கள் எதிரிகளை எளிதில் கவிழ்ப்பீர்கள். குறுகிய பயணங்களை மேற்கொள்வது நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதை விட அதிக லாபத்தை ஈட்டக்கூடும். இந்த காலத்தில் தெரிந்தவர்கள், உறவினர்கள், உடன்பிறப்புகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலும் இந்த காலத்தில் வாக்குறுதியைக் கொடுக்கும் முன் நன்கு ஆராய்ந்து பின்னரே வாக்குறுதியை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பெயர் கெட்டுப்போகக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் காதலி அல்லது மனைவியுடனான உங்கள் உறவு மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த காலத்தில் நீங்கள் நல்ல வருமானத்தைப் பெற வாய்ப்புள்ளது. சூரியன் சனியுடன் இணைந்திருப்பதால், செலவினங்களும் உயர்ந்த பக்கத்தில் இருக்கும். எனவே இதைத் தவிர்க்க சிறிய மற்றும் பல திட்டங்களில் முதலீடு செய்வதே சிறந்த வழிமுறையாகும். தொழில் செய்பவர்கள், கடின உழைப்பு மற்றும் முயற்சியால் நிலையான வளர்ச்சி காணப்படும். இந்த காலகட்டத்தில் வணிகங்கள் இலாபங்களையும் வெகுமதிகளையும் உருவாக்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, முரட்டுத்தனமான பேச்சால், குடும்ப உறுப்புனர்களுடன் தேவையற்ற சண்டைகள் அதிகரித்து, வீட்டுச் சூழலில் உள்ள ஒற்றுமை பாழாகும். எனவே அமைதியைக் காக்க விரும்பினால், பேசும் முன் உங்களின் வார்த்தைகளை கவனியுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைவலி, கண்கள் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

மகரம்

மகர ராசியின் 8 ஆவது வீட்டின் அதிபதியான சூரியன், முதல் வீட்டிற்கு செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தராது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கக்கூடும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது. தொழில் ரீதியாக, பணியிடத்தில் தொடர்ச்சியான சவால்களை சந்திக்க நேரிடும். இதனால் உங்களின் பொறுமை தொடர்ந்து சோதிக்கப்படலாம். வணிகர்கள், இக்காலத்தில் திடீர் லாபங்களைப் பெறுவார்கள். தொழில் முறை மாற்றங்கள், உங்கள் தனிப்பட்ட உறவுகளைப் பாதிக்கும். இக்காலத்தில் உங்கள் குடும்பம் மற்றும் துணையுடனான உறவுகள் வலுவிழக்கக்கூடும். எனவே தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சரியான தூரத்தைப் பராமரிப்பது இக்காலத்தில் மிகவும் முக்கியம். மாணவர்கள் இக்காலத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

கும்பம்

கும்ப ராசியின் பன்னிரண்டாவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அவர்களுக்கு உங்களின் முழு ஆதரவு தேவை. எனவே கடினமான காலங்களில் அவர்களுடன் இருங்கள். தொழில் ரீதியாக, இந்த காலத்தில் சில புதிய வாய்ப்புகள் வரக்கூடும், எனவே, இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், முடிவெடுப்பதில் புத்திசாலித்தனமாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்தவொரு சட்டத்தையும் மீறாமல் கவனமாக இருங்கள். இல்லையெனில், நீங்கள் பின்னர் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் தூக்கமின்மை, கண் பார்வை மற்றும் வயிறு தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவனச்சிதறல்களை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசியின் பதினொன்றாவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, சூரியனின் இந்நிலை நிலுவையில் உள்ள முடிக்கப்படாத அனைத்து பணிகளையும் முடிக்க வைக்கும். இதனால் பணியிடத்தில் நீங்கள் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் செயல்திறனும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கும். இதனால் அதிக வருமானம் மற்றும் செல்வத்தை ஈட்டுவதற்கான உங்கள் திறன் அதிகரிக்கும். இப்பெயர்ச்சியால் வணிகர்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதும் சாதகமானதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, காதல் விஷயத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் காதலியை பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்வீர்கள். இது உங்கள் இருவருக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கி, காதல் வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ளும். மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டியிடம் இருந்து நல்ல ஆதரவைப் பெற வாய்ப்புள்ளது. இது அவர்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker