ஆரோக்கியம்புதியவை

செல்போனை இந்த இடங்களில் தவறிக்கூட வைச்சிடாதீங்க… ஆபத்து அதிகமாம்

தற்போதைய காலத்தில் செல்போன் என்பது அடிப்படையான ஒன்றாக அமைந்துவிட்டது. கொரனா காலத்திற்கு பிறகு, கல்வி மற்றும் அலுவலக வேலை சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் செல்போன் முக்கிய பங்கு வகிக்கின்றன.

செல்போனை போகுமிடமெல்லாம் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயச் சூழலுக்குப் பலரும் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால், பல்வேறு சுகாதாரத்துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சில இடங்களில் போனை வைத்துக் கொள்ள கூடாது என்று குறிப்பிடுகின்றனர். ஏன் அங்கு வைக்கக்கூடாது? மீறி வைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சட்டை/பேண்ட் பாக்கெட்டில் வைக்க கூடாது

அனைவரும் செல்போனை சட்டைப்பையில் வைப்பது என்பது இயல்பான ஒன்றாகும். எளிதாக போகுமிடமெல்லாம் எடுத்து செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றாகும். ஆனால், மருத்துவர் லில்லி ஃப்ரிட்மேன் பையில் போனை வைப்பது என்பது ஆபத்தானது என்று கவலை தெரிவிக்கிறார்.

கதிர்வீச்சு தாக்குதல்

லில்லி கூறுவதாவது, செல்போன் ஆன் ஆகி இருக்கும் பொழுதும் சரி, வைபை போன்ற பொது இடங்களில் இணைய வசதியுடன் உங்களது போன் தொடர்பில் இருக்கும் பொழுதும் சரி , உங்கள் போனானது அதிக கதீர்வீச்சினை வெளியிடும். ஏற்கனவே சட்டைப்பையில் இருக்கும் உங்களது செல்போன் வெளியிடும் கதிர்வீச்சுகளால் உங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கேன்சர் தாக்குதல்

கேன்சருக்கான சர்வதேச ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ள தரவானது நமக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருக்கிறது. புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய ஆற்றலானது செல்போன் வெளியிடும் கதிர்வீச்சுக்கு இருக்கிறது என்கிறது. மருத்துவர் லில்லி கவலையுடன் தெரிவிப்பது என்னவெனில், பர்ஸ் மற்றும் பேக் போன்றவற்றில் செல்போன் வைத்திருக்கும் பொழுது வெளியிடும் கதிர்வீச்சின் அளவினை விட சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருக்கும் பொழுது ஏழு மடங்கு அதிக கதிர்வீச்சினை உமிழ்கிறது என்று குறிப்பிடுகிறார்.

செல்போனை உள்ளாடைகளில் வைக்க கூடாது

சில ஆய்வுகள் தெரிவிப்பது என்னவென்றால் போனை உள்ளாடைகளில் வைப்பதால் கதிர்வீச்சுகள் நேரிடையாக தாக்கி புற்று நோயை உருவாக்குகின்றன என்கிறது. அதாவது, ப்ராவில் போனை வைப்பதன் மூலம் எளிதாக மார்பக புற்று நோய் தாக்குகிறது என்கிறார்கள்.

​பாக்டீரியா தாக்குதல்

விளையாட்டு சமயங்களில் சாக்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ப்ரா போன்ற உள்ளாடைகளில் செல்போனை வைத்திருப்பது இயல்பான ஒன்றாகும். ஆனால், இயல்பாகவே விளையாட்டு சமயங்களில் ஏற்படும் வியர்வையின் காரணமாக உள்ளாடைக்குள் இருக்கும் செல்போனினால் தோல் அலர்ஜி ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் தாக்குதல் ஏற்பட காரணமாக இருக்கின்றன.

படுக்கையில், தலையணைக்கு அருகில் வைக்க கூடாது

நேசனல் ஸ்லீப் பவுண்டேசன் என்ற அமைப்பின் தகவலானது, தூக்கத்தின் பொழுது உங்களுக்கு அருகில் போனை வைத்திருப்பது ஆபத்தானது என்கிறார்கள். குறிப்பாக, தலைக்கு அருகவே சார்ஜ் போட்டுவிட்டு தூங்கும் பழக்கத்தின் பொழுது அதில் இருக்கும் எல்இடி வெளிச்சத்தின் காரணமாக தூக்கத்துக்கான சுரப்பி உருவாகுவதில் பாதிப்பு ஏற்படுவதால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் வருகின்றன.

மூளை காய்ச்சல் :

கேன்சர் மையங்கள் அறிக்கையின்படி, பல மணி நேரங்களாக தலைக்கு செல்போன் கதிர்வீச்சு செல்வதால் ப்ரயின் டியூமர் போன்ற பெரும் பிர்ச்சனைகள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

சார்ஜ் போடும் போது கவனிக்க வேண்டியவை:

செல்போனுக்கு சார்ஜ் போட்டுக் கொண்டே உபயோகிப்பது என்பது கட்டாயமாக தவிர்க்க வேண்டியது ஆகும். மேலும், 100% சார்ஜ் ஆனதற்கும் பிறகு தொடர்ந்து சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும். அது உங்கள் செல்போனை பாதிப்பதுடன் பேட்டரியின் செயல்பாட்டிலும் பாதிப்பை உருவாக்கும். இதனால் உங்களுக்கு உடலுக்கு பிரச்சனையை தாண்டி பொருளாதார பிரச்சனைக்கும் வழி வகுக்கும்.

முகத்திற்கு அருகே வைத்து போன் பேச கூடாது:

முகத்திற்கு அருகே போனை வைத்து பேசிக் கொண்டிருந்தால் பாக்டீரியாக்கள் உருவாகி முகத்தினை தாக்கும். அதனால், முகப்பரு, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, ஹெட்போன் போன்றவற்றினை பயன்படுத்துவதன் மூலம் முகத்திலிருந்து சில தூரங்களில் வைத்துக் கொள்ள முடியும்.

சூடான பகுதிகளில் வைக்க கூடாது

சிலர் செல்லும் இடமெல்லாம் போனை தூக்கி செல்வதால் சமையலறை, கார் டேஷ்போர்ட் போன்ற இடங்களில் போனை கொண்டு செல்கின்றனர். இது ஆபத்தானதாகும். சூடான இடங்களில் போன் ஆட்டொமெட்டிக்காக சூடாகி பேட்டரி செயல் இழப்பதுடன் அதனை பயன்படுத்துவதால் நமக்கும் சூட்டினை பரப்புகிறது. குறிப்பாக, காரில் டேஷ்போர்டிலிருக்கும் அறையில் செல்போனை வைத்து பூட்டி விடுகிறோம். அது பாதுகாப்பாக இருப்பதாக நாம் கருதினாலும் மூடிய அறையினால் செல்போன் இயல்பாகவே சூடாகி விடுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டியது.

வெளிப்புற இடங்களில் பயன்படுத்தக் கூடாது

ரோடு, பீச் போன்ற சூரிய வெளிச்சம் நேரிடையாக போனில் படும் இடங்களில் செல்போனை பயன்படுத்தக் கூடாது. அது செல்போன் டிஸ்பிளேவை பாதிப்பினை ஏற்படுத்துவதுகின்றது. மேலும், செல்போன் உடனடியாக சூடாகி விடுகின்றன.

பாத்ரூமில் பயன்படுத்தக் கூடாது

செல்போனை பாத்ரூமில் வைத்து பயன்படுத்த கூடாது என்று சர்வதேச ஆய்வுகள் சொல்கின்றன. ஏனெனில், பாத்ரூமில் இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவை செல்போனில் தங்கி விடுகின்றன. இதனை நாம் பயன்படுத்தும் பொழுது கை மற்றும் காதின் வழியாக அவை உடலுக்குள் சென்றுவிடக் கூடிய ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker