அழகு..அழகு..புதியவை

குண்டானவர்களுக்கு ஸ்டெர்ச் மார்க் போக்கும் வீட்டு வைத்தியங்கள்

பெண்களுக்கு உடலில் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் ஸ்டெர்ச் மார்க் வரும். இது குழந்தை பெற்ற பின்பு தான் வரவேண்டும் என்பதெல்லாம் கிடையாது. உடல் பருமனாக உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கும். அதை எவ்வாறு வீட்டிலுள்ள முட்டை போன்ற பொருள்களின் வாயிலாக சரிசெய்ய முடியும் என்று பார்க்கலாம்.

இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் பிரசவமான பெண்களுக்கு மட்டுமல்ல உடல் எடை அதிகமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட ஏற்படுகிறது. திடீர் எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு காரணமாக சரும நீட்சித் தன்மையால் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் உருவாகிறது. இயற்கையிலயே சில பொருட்களுக்கு ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்க்கை நீக்கக்கூடிய தன்மை உண்டு. இது உங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்ஸைக் கொஞ்சம் கொஞ்சமாக மறையச் செய்து விடும். இருப்பினும் இதை நீங்கள் வழக்கமாகச் செய்து வந்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை உங்கள் சரும திசுக்களை புதுப்பிக்கக் கூடிய தாவரமாகும். இது உங்கள் சரும பிரச்சனைகளை ஆற்றும் திறன் படைத்தது. இந்த கற்றாழை இலையில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதிகளில் இந்த ஜெல்லை தடவுங்கள். அதை அப்படியே 20-30 நிமிடங்கள் உலர விடவும்.பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவுங்கள். நீங்கள் தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காண முடியும்.

​வெள்ளரிக்காய்

லெமன் ஜூஸில் இயற்கையாகவே அமிலத் தன்மை இருப்பதால் சரும தழும்புகளைப் போக்க பயன்படுகிறது. அதே நேரத்தில் வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கு குளிர்ச்சியை தருவதோடு நல்ல ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு இரண்டையும் சம அளவு வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வாருங்கள். 10 நிமிடங்களுக்குப் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வாருங்கள். தழும்புகள் வேகமாக மறைவதைப் பார்க்க முடியும்.

​தேங்காய் எண்ணெய்

பாதாம் பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சம அளவு எடுத்து கலந்து ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதிகளில் தடவுங்கள். 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இயற்கையான எண்ணெய் மற்றும் பாதாமை பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. தைரியமாக எல்லோரும் இதை பயன்படுத்தலாம்.

​விளக்கெண்ணெய்

ஸ்ட்ரெட்ச் மார்க் போக்க முதலில் நீங்கள் அதற்கு ஈரப்பதமூட்ட வேண்டும். இதற்கு விளக்கெண்ணெய் மிகவும் சிறந்தது. விளக்கெண்ணெய் இயற்கையாகவே சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கக்கூடியது. அதனால் இதை வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும்.

​முட்டை மாஸ்க்

மாஸ்க் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதமூட்டி எளிதில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் போக்க உதவி செய்கிறது. இதை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்

2 முட்டையின் மஞ்சள் கரு, நன்றாக அடித்து வைத்துக் கொள்ளுங்கள்

1 லெமன் ஜூஸ்

2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல்

2 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்

பால்

பொருட்களை பெளலில் எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை உங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதிகளில் தடவி 30 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். லேசாக ஸ்க்ரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வாருங்கள். விரைவிலேயே மாற்றத்தை காண்பீர்கள்.

Related Articles

Close