உலக நடப்புகள்புதியவை

மகரம் செல்லும் புதன் சனியுடன் இணைவதால் அதிகம் கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

புத்தி, அறிவு, கருத்துப் பரிமாற்றம் போன்றவற்றைக் குறிக்கும் புதன் நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக கருதப்படுகிறது. ஏனெனில் புதனின் பலன்கள் அது எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஒருவரது ராசியில் புதன் தவறான நிலையில் இருந்தால், அது அந்த ராசிக்காரர்களை பதற்றமாக வைத்திருப்பதுடன், எதையும் மோசமான அணுகுமுறையுடன் கையாள வைக்கும்.

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக இந்த பெயர்ச்சி சாதகமான முடிவுகளைத் தரும். உங்களின் தகவல் தொடர்பு திறன்கள் பணியிடத்தில் உயர் பதவிகளைப் பெற உதவும். உங்களின் யோசனைகள் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் என்பதால், உங்கள் வாழ்க்கையைப் பற்றிய திட்டங்களையும் உத்திகளையும் உருவாக்க இது ஒரு பொருத்தமான நேரம். இக்காலத்தில் வணிகம் மற்றும் தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் லாபங்கள் கிட்டும். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும் மற்றும் உங்கள் உடன்பிறப்புகளுடனான உங்களின் உறவை வலுப்படுத்தும். இருப்பினும் புதன் சனியுடன் இணைந்து இருப்பதால், உங்களின் நற்பெயர், முடிவுகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அதிகம் கவலைப்படக்கூடும். உங்கள் செயல்பாட்டில் பதற்றமும், கவலையும் அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியான புதன், 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் இந்த பெயர்ச்சியால் பயனடைய வாய்ப்புள்ளது. இதுவரை நீங்கள் எதிர்கொண்ட தடைகள் நீங்கும். உங்கள் குழந்தைகளுடனான உறவு மேம்பட வாய்ப்புள்ளது. ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கக்கூடும். புதன் சனியுடன் இணைந்திருப்பதால், தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நடக்கும் விஷயங்கள் மெதுவாக இருக்கும். ஆனால் அவை சரியான திசையில் செல்லும். எனவே முயற்சிகளை கைவிடாமல் தொடருங்கள். வர்த்தகம் அல்லது பங்குச் சந்தையில் உள்ளவர்கள், இக்காலத்தில் திடீர் லாபம் அல்லது வருமானத்தைப் பெறலாம். மேலும் இக்காலத்தில் மறதியால் கஷ்டப்படுவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். அதுவும் புதன் சனியுடன் இணைந்திருப்பதால், இக்காலத்தில் சில மாற்றங்கள் அல்லது சவால்களை எதிர்கொள்வீர்கள். இது உங்களை கவலையடையச் செய்வதோடு, பதட்டமடையவும் செய்யும். அதோடு இக்காலத்தில் உங்கள் மீது நம்பிக்கையின்மையை உணர்வீர்கள். இதனால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். மேலும் இக்காலத்தில் நிதி நிலைமைகளை மேம்படுத்த குறுக்குவழியில் செல்லத் தூண்டும். இருப்பினும், இதுப்போன்ற செயல்களை எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியம் குறையக்கூடும். முடிந்தவரை அவருக்கு உதவ முயற்சி செய்யுங்கள். முக்கியமாக இக்காலத்தில் எந்தவொரு கடுமையான வார்த்தையையும் நையாண்டியையும் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். இல்லையெனில் வீட்டின் சூழல் மோசமாகும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கடகம்

கடக ராசியின் 3 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான புதன், 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் நல்ல ஆதாயம் கிட்டும். வெளிநாட்டில் குடியேற வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்கள் அல்லது வெளிநாட்டு மூலங்களிலிருந்து வருமானம் ஈட்டுபவர்களுக்கு இப்பெயர்ச்சியால் நன்மை பயக்கும். உங்கள் துணையுடனான தவறான புரிதல்கள் அல்லது முரண்பாடுகள் இக்காலத்தில் தீர்க்கப்படும். சமுதாயத்தில் உங்கள் நிலை அதிகரிக்கும். இந்த கால கட்டத்தில் உங்கள் உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களுடனான உங்கள் உறவும் மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் நரம்பு மண்டலம் மற்றும் முதுகு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அதிக எடையைத் தூக்க வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல முடிவுகளை வழங்கப் போகிறது. தொழில் ரீதியாக, பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உங்களின் தகவல்தொடர்பு மேம்பட வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுடனான நட்புறவு வலுவாவதோடு, அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மேலும் நேரத்திற்கு முன்பே உங்களின் இலக்குகளை அடைய இது உதவும். வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் ஆதரவைப் பெற விரும்பும் வணிகர்கள் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். தனிப்பட்ட முறையில், சொத்து தொடர்பாக சில நீதிமன்ற வழக்குகள் அல்லது சட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ளலாம். இதன் விளைவாக உங்கள் பணம் மற்றும் ஆற்றல் வீணாகும். இருந்தாலும், அதில் வெற்றியைக் காண்பீர்கள். போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ள நினைப்பவர்களுக்கு, இக்காலம் பொன்னான காலமாகும்.

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சிறு விஷயத்திற்கும் மற்றவர்கள் உங்களை விமர்சிக்கக்கூடும். அற்புதமான விஷயங்களால் உங்கள் துணையுடன் சண்டையில் ஈடுபடலாம். எனவே இக்காலத்தில் துணையைக் கையாளும் போது கவனமாக இருங்கள். இல்லாவிட்டால், நீண்ட காலத்திற்கு சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். தொழில் ரீதியாக, பணியிடத்தில் எதிர்கொள்ளும் ஒருசில சூழ்நிலைகளால், உங்கள் வேலையை பாதுகாப்பற்றதாக நினைக்கலாம். இது உங்களுக்கு மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி, முடிவுகளை அவசரமாக எடுக்கத் தூண்டும். எனவே இம்மாதிரியான நேரங்களில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அவசர முடிவுகளை எடுத்துவிடாதீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம், பதற்றத்தால், அஜீரண கோளாறு, மலச்சிக்கல் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகள் தூண்டப்படலாம். எனவே நிதானமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வீட்டுச் சூழல் மகிழ்ச்சி நிறைத்ததாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் தாயின் ஆரோக்கியம் மேம்படும். இக்காலத்தில் ஒருவித திருப்தியை உணர வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையிடமிருந்து சில ஆதாயங்களைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் துணை அவர்களின் தொழிலில் முன்னேற வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியுள்ள அனைத்து நேர்மறைகளும் உங்கள் தொழில் வெற்றியில் பிரதிபலிக்கும். இக்காலத்தில் வருமானத்தை அதிகரிக்க பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமான பயணங்கள் மிகவும் திருப்திகரமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். மாணவர்கள் இக்காலத்தில் பயனடைய வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் நீங்கள் நிலங்கள் அல்லது சொத்துக்களில் முதலீடு செய்யலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். புதனின் இந்த நிலை உங்களின் வருமானம் மற்றும் அந்தஸ்து அதிகரிப்பதைக் குறிக்கிறது. பொருத்தமான வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இக்காலத்தில் நிச்சயமாக சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் சிறு பயணங்களும் பயனளிக்கும். இந்த காலகட்டத்தில் புதிய வடிவிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உத்வேகத்தை அளிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் உடன்பிறப்புகளுடன் சில தரமான நேரத்தை செலவிட்டு, அவர்களின் பேச்சை செவிக் கொடுத்து கேட்டு, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் செவி சாய்ப்பதால், அவர்களுடனான உறவு வலுபெறும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான தொற்றுகள் மற்றும் காது மூக்கு தொண்டை பிரச்சனைகளை சந்தித்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். புதனின் இந்நிலையால் இந்த ராசிக்காரர்கள் வாய் பகுதியை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈறுகள் மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் காதலி அல்லது துணை, அவர்களின் வேலை அல்லது உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். எனவே அவர்களுக்கு உங்கள் முழு ஆதரவையும் வழங்குங்கள். திருமணமாகாதவர்கள், இக்காலத்தில் பல நல்ல வரன்களை சந்திக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, வணிகர்களுக்கு, குறிப்பாக கூட்டாண்மை வடிவத்தில் வியாபாரத்தை நடத்துபவர்களுக்கு நல்ல காலம். அவர்கள் நிலையான வளர்ச்சியைக் காணலாம். பணிபுரிபவர்கள், தங்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். இக்காலத்தில் உங்களின் போட்டி மனப்பான்மை அதிகமாக இருக்கும். அதோடு அதில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. எனவே போட்டித் தேர்வுகள், வினாடி வினா போன்றவற்றில் பங்கேற்க இது நல்ல காலமாகும்.

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இது உங்கள் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளவும், அதிர்ச்சியூட்டும் வெற்றியை அடையவும் உதவும். இருப்பினும், புதனின் இந்நிலை சிலசமயங்களில் தேவையற்ற வாதங்களில் ஈடுபடச் செய்து, உங்கள் ஆற்றலை வீணடிக்கச் செய்யும். எனவே இக்காலத்தில் பெரிய விஷயங்களைச் செய்ய உங்களின் ஆற்றலைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இக்காலத்தில் உங்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் சருமம், அலர்ஜி, ஹார்மோன்கள் போன்றவற்றில் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.

கும்பம்

கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கும்ப ராசிக்காரர்கள் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். வெளிநாடுகளில் உயர் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமாக இருந்து, நேர்மறையான முடிவுகளை வழங்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக முடிவுகள், ஆசைகள் மற்றும் இலக்குகளை அடைய வழக்கத்தை விட அதிகமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். புதன் சனியால் பாதிக்கப்படுவதால், இது வழக்கத்தை விட மந்தமான வேகத்தில் நகரும். இது விரக்தியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும். எனவே, இக்காலத்தில் உங்கள் பொறுமையை பராமரிக்கவும். எவ்விதமான வாதங்களையும் வழக்குகளையும் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் இது பெரிய இழப்புக்களை உண்டாக்கும். இதில் இருந்து தப்பிக்க நினைத்தால், உங்கள் எதிரிகளை நேரடியாக எதிர்கொள்ள நினைக்காதீர்கள். நிதியைப் பொறுத்தவரை, வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். எனவே இவற்றில் சமநிலையைப் பராமரிக்க முயற்சி செய்யவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நரம்பு மண்டலம், வயிறு மற்றும் கால்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

மீனம்

மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கூட்டாண்மை தொழில் செய்வர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நீண்ட காலம் கழித்து உங்கள் நண்பரை சந்திப்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தும். இந்த காலக்கட்டத்தில் மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதும், தொடர்பு கொள்வதுமான உங்களின் திறன்கள் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடையே பிரபலமாகி, அவர்களிடமிருந்து பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். மேலும் இக்காலத்தில் சிக்கல்களுக்கு விரைவான மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் காணும் உங்களின் திறன் பணியிடத்தில் சிறப்பாக பேசப்படுவதோடு, பாராட்டையும் பெறுவீர்கள். சுயதொழில் செய்பவர்கள் பல ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இக்காலம் மாணவர்களுக்கு நன்மையளிக்கக் கூடியதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகப்படுத்தும் காலமாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker