வெங்காயத் தோலை தூக்கி இனி குப்பையில் வீசாதீங்க! அதுல இவ்ளோ சத்து இருக்கா?
வெங்காயம் சமையலில் பயன்படும் முக்கியமான பொருள் என்பது நமக்கு தெரியும். இதில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன.
அதே மாதிரி நாம் வீணாக கீழே போடும் வெங்காய தோல் கூட நமக்கு பல வழிகளில் உதவுகிறது.
இந்த வெங்காய தோல்களில் கூட பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
வெங்காய தோல் அளிக்கும் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்.
வெங்காய தோல் ஊட்டச்சத்துக்கள்
பல ஆய்வுகள் வெங்காயத் தோல்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் , வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் இதயத்திற்கு நட்பான ஃபிளாவனாய்டுகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதற்கும் வெங்காயத் தோல்கள் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அதன் தோலில் பூச்சிக்கொல்லி இல்லாத இயற்கையாக வரும் வெங்காய தோல்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
- வெங்காய தோல் டீ உங்க மனதை அமைதிப்படுத்தவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
- தேயிலையை சேர்த்து டீ போடும் சமயத்தில் வெங்காய தோலையும் சேர்த்து சூடான நீரில் கொதிக்க விடுங்கள்.
- பிறகு இந்த டீயை வடிகட்டி ஆரோக்கியமாக குடித்து வாருங்கள்.
தாகத்தை தீர்க்க வெங்காய தோல் தண்ணீர்
- வெங்காய தோல் சேர்க்கப்பட்ட நீர் உங்க அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும்.
- நீடிக்கும் தசை பிடிப்புகளையும் இது சரியாகக் உதவுகிறது.
- ஒரு கிளாஸ் தண்ணீரில் வெங்காயத் தோல்களைச் சேர்த்து, குறைந்தது 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு தோல்களை அகற்றி விட்டு அந்த தண்ணீரை குடியுங்கள்.
பிரியாணி
- பிரியாணி, புலாவ், வறுத்த அரிசி, ஜீரா அரிசி – கிட்டத்தட்ட எல்லா அரிசி உணவுகளுடனும் சில வெங்காயத் தோல்களை சேர்த்து சமைப்பதன் மூலம் சுவையை மேம்படுத்தலாம். இது சூப்பராக இருக்கும்.
இனியாவது வெங்காய தோலை தூக்கி வீசாதீர்கள்.