இரவில் தலைக்கு அருகில் தண்ணீர் வைப்பதன் காரணம் என்ன தெரியுமா? குடிப்பதற்கு மட்டும் இல்லையாம்
உடலில் உள்ள உள்ளுறுப்புகள் சீராக இயங்குவதற்கும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கும் தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இத்தகைய தண்ணீரை பலரும் இரவில் தூங்கும்போது தலைக்கு அருகில் வைத்து தூங்குவர் அதற்கு என்ன முக்கிய காரணம் என பார்ப்போம்.
தலைக்கு அருகில் தண்ணீர் வைப்பதன் காரணம் குறித்து காண்போம்
நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் தூங்குவதற்கு முன்பாக தலைக்கு அருகில் ஒரு சொம்பில் அல்லது டம்ளரில் தண்ணீர் வைத்துவிட்டு படுப்பார்கள்.
இதற்கு காரணம் இரவில் தாகம் எடுக்கும் போது குடிப்பதற்கு என்றுதான் பெரும்பாலானோர் நினைத்து இருப்போம். ஆனால் அதற்கான உண்மையான காரணம் அது அல்ல.
வீட்டில் யாராவது மனஅழுத்தம், மனநோயினால் தொடர்ந்து நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தால் அந்த வீட்டில் தீய சக்தி உள்ளதென்று யாகம், பூஜை போன்றவற்றினை செய்வதை நாம் பார்த்திருப்போம்.
இதற்கான தீர்வாக தான் பெரியோர் தூங்கும் முன்பு தண்ணீர் வைக்கிறார்கள். தண்ணீர் நம் அருகில் உள்ளபோது தீயசக்திகள் நம்மை அண்டாது.
இந்த நீரை மறுநாள் காலை கீழே ஊற்றிவிடவேண்டும். இவ்வாறு செய்தால் தீயசக்திகள் நம்மை நெருங்காது.
இரவில் நாம் வைக்கும் தண்ணீரில் சிறுசிறு குமிழ்கள் காணப்பட்டால் கெட்டசக்திகள் நீக்கப்பட்டு விட்டது என்று அர்த்தம். குமிழ்கள் காணப்படவில்லை எனில் அங்கு தீய சக்திகள் இல்லை.