சமையல் குறிப்புகள்புதியவை

முட்டைகோஸ் வாசனையே வராம எப்படி பொரியல் பண்ணலாம்

முக்கிய பொருட்கள்

  • 250 கிராம் நறுக்கிய Patta Gobhi
  • 1 கப் peas
  • 2 கப் tomato puree

பிரதான உணவு

  • தேவையான அளவு Haldi
  • தேவையான அளவு red chilli powder
  • 1 தேக்கரண்டி coriander powder
  • 1 தேக்கரண்டி Jeera
  • தேவையான அளவு Namak
  • 1 கைப்பிடியளவு நறுக்கிய Dhania
  • 1 தேக்கரண்டி நறுக்கிய Hari Mirch

Step 1:

முட்டைகோஸை பொடியாக நறுக்கிக்கோங்க. நறுக்கிய முட்டைகோஸை ஒரு பெரிய கிண்ணத்தில் எடுத்துக்கோங்க.

Step 2:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்குங்க. அதில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடேறினதும் கடுகை போட்டு தாளித்து, கடுகு வெடிக்கும் வரை வெயிட் பண்ணுங்க. கடுகு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை அதில் சேர்த்துக்கோங்க. இப்போ அந்த வாணலில நறுக்கிய முட்டைகோஸை போட்டு 4 முதல் 5 நிமிடம் வதக்குங்க.

Step 3:

முட்டைகோஸ் மென்மையாகும் வரை வேகவிட்டு அப்பறமா அதில் பட்டாணியை சேர்த்துக்கோங்க. தீயை சிம்மில் வைத்து ஆர்கானிக் உப்பையும் சேர்த்து கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வேகவிடுங்க.

Step 4:

2 நிமிடங்கள் கழிச்சி மூடியை திறந்து தக்காளி ப்யூரியை அதில் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்து விடுங்க. பிறகு குறைந்த தீயில் இந்த கலவையை 5 முதல் 6 நிமிடங்கள் வேகவிடுங்க.

Step 5:

காய்கறிகள் வெந்ததும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து மூடியால் மூடி இன்னும் ஒரு 5 நிமிடங்கள் வேகவிடுங்க. இப்போ மூடியை திறந்து எல்லா காய்கறிகளையும் நல்லா கிளறிவிட்டு 2 நிமிஷம் அதிகமான தீயில் வைச்சு வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்குங்க. நம்மோட முட்டைகோஸ் பட்டாணி மசாலா ரெடி! இதை கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிச்சு ரொட்டி அல்லது சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷா தொட்டு சாப்பிடலாம். சாம்பார் சாதத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker