அழகு..அழகு..புதியவை

திருமணத்தன்று ராணியைப் போல் ஜொலிக்க வேண்டுமா? அப்போ 1 மாதத்திற்கு முன்பே ’பிரைடல் ஸ்கின்கேர்’ ஃபாலோ பண்ணுங்க..!

திருமணம் என்றாலே பலருக்கும் கோலாகலம் தான். அதுவும் இந்திய பாராம்பரிய திருமணம் என்றால் சொல்லவே வேண்டாம். பொதுவாகவே பெண்களுக்கு தங்களை மிகவும் அழகாக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம் இருக்கும். அதுவும் தங்கள் கல்யாணம் என்றால் அட்டகாசமாக ரெடி ஆகணும்னு நினைப்பாங்க. திருமணத்தின்போது ஒரு இளவரசியைப் போல் காட்சியளிக்க எந்தவொரு மணப்பெண்ணும் விரும்புவது இயல்பே. அதற்காக அவர்கள் பல விதமான மேக்கப் பொருட்களை போடுவார்கள்.

திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் 1 மாதத்திற்கு முன்னரே ஃபேஷியல் செய்வது அவசியம். அப்போதுதான் அவர்களின் ரிசப்ஷனில் (Reception) பளிச்சென்று தெரிவார்கள். கல்யாண பெண்களுக்கு என தனிப்பட்ட ஃபேஷியல்கள் உள்ளன. பேர்ல், கோல்ட், டயமெண்ட், ஃப்ரூட் என நிறைய இருக்கு. சில சென்சிடிவ் சருமங்களுக்கு இயற்கை முறையில் பழங்களை (Fruit) கொண்டு பேஷியல் செய்யலாம்.

தற்போது லேட்டெஸ்ட் வரவு ஜுவல் ஃபேஷியல். பெயருக்கு ஏற்ப நவரத்தினங்களின் துகள்கள் கொண்ட ஃபேஷியல். இதுபோன்று பேசியல் செய்துகொள்ள பணம் செலவாகும் என்று நினைக்க வேண்டாம். அது இடத்திற்கு இடம் வேறுபடும். அதை விட இப்போது உங்களுக்காக மணப்பெண்களுக்காகவே பிரத்தியேகமாக ஒரு சில ஸ்கின்கேர் டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது இதை நிச்சயம் ட்ரை பண்ணுங்க…

திருமணத்திற்கு முன்னர் ஒவ்வொரு மணமகளும் பின்பற்ற வேண்டிய ஸ்கின்கேர் டிப்ஸ்கள் இதோ.,

* சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளுங்கள் :

சருமம் வறட்சி ஆகாமல் பார்த்துக்கொள்ள நீர்ச்சத்து போதுமான அளவு இருக்க வேண்டும். தாகம் இல்லையென்று தண்ணீரை தவிர்க்காமல் தினமும் 3 முதல் 3.5 லிட்டர் வரை தண்ணீர் குடித்து வந்தால் சருமம் குளு குளுவென்று குளிர்ச்சியாக இருக்கும். மேலும் இதனால் சோர்வு தெரியாது. எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மட்டும் போதாது. முகம் பிரகாசத்தை அடைய நீங்கள் பகலிலும் இரவிலும் மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவதோடு ஏராளமான தண்ணீ
ரையும் குடிக்க வேண்டும்.

* வெளியில் செல்லும்போது கவனிக்க வேண்டியது :

உங்கள் சருமம் அதிகப்படியான வெயிலையோ, மழையையோ படும்படி இருக்கக்கூடாது. குறிப்பாக அதிக வெயில் இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதாக இருந்தால் உங்கள் சருமத்துக்கேற்ற சன்ஸ்க்ரீன் உரிய இடைவேளையில் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். சருமத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குவதில் வெயிலின் பங்கு அதிகம் என்பதால் சன்ஸ்க்ரீன் பயன்பாடு குறித்து சந்தேகம் இருந்தாலும் சரும பராமரிப்பு நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம். குளிர்காலம் மெல்லிய தன்மை மற்றும் வறண்ட சருமத்தை அளிப்பதால், வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் உங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும்.

இறந்த சரும செல்களை அகற்ற, நீங்கள் ஒரு நல்ல எக்ஸ்போலியேட்டருடன் சருமத்தை பொலிவுப்படுத்தும் கிரீம்களைப் பயன்படுத்தலாம். சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர் வீச்சின் தாக்கம் சருமத்தின் மீது படும்போது சருமம் பாதிக்கப்படுகிறது. வளரும் பருவம் முதல் வயதானவர்களின் சருமம் வரை அனைவருக்கும் இது பாதிப்பை உண்டாக்கும். புகையிலையில் இருக்கும் ரசாயனங்களின் வெளிப்பாடு, அதிக மாசு இருக்கும் இடங்களில் வாழும் போது இவை சருமத்தை பாதிக்க செய்கிறது.

* நல்ல க்ளின்சிங்கை பயன்படுத்தலாம் :

சி.டி.எம் அல்லது ‘க்ளென்சிங் டோனிங் மாய்ஸ்சரைசிங்’ என்பது எந்தவொரு தோல் பராமரிப்புக்கும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். குளிர்காலத்தில் சருமத்தை பொலிவாக வைத்திருக்க இது முற்றிலும் தேவைப்படுகிறது. முகத்தை தண்ணீரால் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதோடு முறையான உணவு பழக்கங்களும் சரும ஆரோக்க்கியத்துக்கு தேவை. ஊட்டச்சத்து மிக்க உணவு உடல் ஆரோக்கியம் போன்றே சரும ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. உடலுக்கு ஊட்டச்சத்து போதுமான அளவு கிடைக்காதபோது அது சருமத்தையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.

* வீட்டு வைத்தியம் :

பராமரிப்போடு உணவும் அழகை பராமரிக்க உதவும். வைட்டமின் C நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் என தினம் ஒன்று திட்டமிட்டு எடுத்துகொண்டால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையாமல் இருக்கும். சருமத்தில் விரைவிலேயே சுருக்கமும் உண்டாகாமல் இருக்கும். அழகு பராமரிப்பில் இயன்றவரை வீட்டில் இருக்க கூடிய பொருள்களை மட்டுமே பயன்படுத்துங்கள். தினம் ஒன்றாக மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் இவை சருமத்துக்கு நன்மையோடு பாதிப்பையும் உண்டாக்கும். அதனால் அதிகம் பராமரிக்கிறேன் என்று சருமத்தை சேதப்படுத்திவிட வேண்டாம்.

வெளி தயாரிப்புகளை வாங்கும் போதும் அடிக்கடி ஒவ்வொரு பொருளையும் மாற்றி கொண்டிருக்காமல் உங்கள் சருமத்துக்கேற்ற பொருள்களை உரிய சரும பராமரிப்பு நிபுணரோடு கலந்து ஆலோசித்து பயன்படுத்தினால் அழகு குலையாமல் பாதுகாக்கலாம்.

* பொலிவான கண்கள் மற்றும் உதடுகள்:-

உதடுகளின் அழகைக் கெடுப்பதே குளிர்கால வறட்சி தான். ஆகவே அத்தகைய வறட்சியை போக்க, தண்ணீர் அதிகம் பருகினால், போதிய நீர்ச்சத்து கிடைத்து, உதடுகள் எப்போதும் அழகாக வெடிப்புக்களின்றி இருக்கும். நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களை கழுவினாலும், கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.

மேற்சொன்ன டிப்ஸ்களை அடிக்கடி உங்கள் சருமத்துக்கு நீங்கள் செய்யலாம். அதுவும் குறைந்த செலவில் செய்ய முடியும். ஆனால் தொடர்ந்து இந்த பராமரிப்பை செய்துவந்தாலே நாளடைவில் உங்கள் மிளிரும் பின்னர் உங்களின் அழகான சருமத்தை கண்டு நீங்கள் மட்டுமல்ல மணமகன் வீட்டாரும் மகிழ்ச்சி கொள்வர்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker