கழுத்து வலியினால் பெரும் அவதியா? இந்த பயிற்சி ஒன்றே போதும்
பொதுவாக வேலை செய்யும் ஆண்களுக்கு சரி பெண்களுக்கும் சரி அடிக்கடி கழுத்து வலியினால் அவதிப்படுவதுண்டு.
இதற்கு முக்கிய காரணம் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதனாலும், கணினி முன்பு வெகுநேரம் செலவிடுவதனாலும் கழுத்து வலி எளிதில் வந்து விடுகின்றது.
இதற்கு வீட்டில் இருந்தப்படி சில பயிற்சிகளை மேற்கொள்ளுவது சிறந்த முறை ஆகும்.
அந்தவகையில் கழுத்துவலியினை போக்க கூடிய பயிற்சி ஒன்றினை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
ஸ்டெப் 1
முதலில் படத்தில் காட்டியவாறு இந்த பயிற்சியினை நேராக நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில் செய்ய வேண்டியது அவசியமாகும்.
உங்கள் வலது புறம் உள்ள காது வலது தோள்பட்டையில் படும்படியாக தலையை வலது புறமாக சாய்க்க வேண்டும்.
அதே நேரம் வலது கையை இடது பக்கம் காதின் மேல் பக்கமாக வைத்து தலையை வலது பக்கம் நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்..
அப்போது இடது புறமாக உள்ள கழுத்துப் பகுதிக்கு ஒரு ஸ்ட்ரெட்ச்(stretch) உணர்வு கிடைப்பதை நம்மால் உணர முடியும். இதே முறையைப் பின்பற்றி இடது புறம் தலையைச் சாய்த்து செய்தல் வேண்டும்.
ஸ்டெப் 2
உங்கள் இடது கையை பின் முதுகில் ‘L’ வடிவில் மடித்துக்கொண்டு, உங்கள் தாடை வலது புறம் மார்பகப் பகுதியில் படும் அளவுக்கு தலையை முன்னோக்கி சாய்த்து, வலது கையை படத்தில் காட்டி இருப்பதுபோல தலையின் மேல்வைத்து கீழ் நோக்கி அழுத்த வேண்டும்.
இந்த நிலையிலும் பின் கழுத்துப் பகுதிக்கு ஒரு அழுத்தமான ஸ்ட்ரெட்ச் உணர்வு தூண்டப்படும். இதே முறையை வலது கையை மடக்கி தாடை இடது மார்பகப் பகுதியில் படுமாறு செய்தல் வேண்டும்.
ஸ்டெப் 3
நேராக அமர்ந்த நிலையில் படத்தில் காட்டியுள்ளது போல இரண்டு கைகளின் விரல்களைக் கோர்த்துக்கொண்டு நெற்றியின் மேல் வைத்து, தலையை முன்னோக்கி அழுத்த வேண்டும்.
அப்போது இரண்டு விரல்களும் இணைக்கப்பட்ட உள்ளங்கைக்குள் கழுத்தை முன்னோக்கித் தள்ள வேண்டும். அதே நிலை முறையைப் பின்பற்றி படத்தில் உள்ளது போன்று, பின்பக்கம் தலையில் கைகளை வைத்து தலையை பின்னோக்கி அழுத்த வேண்டும்.
ஸ்டெப் 4
படத்தில் உள்ளது போல, வலது உள்ளங்கையால் வலது பக்கம் காதை அழுத்தி மூடிக்கொண்டு, தலையை வலது பக்கம் நோக்கி தள்ள வேண்டும்.
அதே முறையினைப் பயன்படுத்தி இடது பக்கம் செய்தல் வேண்டும். இப்போது தலை இடது புறம் நோக்கி நகரும்.
நன்மைகள்
- இந்த பயிற்சியினை செய்யும்போது, கழுத்துப் பகுதியில் ஸ்ட்ரெட்ச்(stretch) உணர்வு கிடைக்கும்.
- மேலும் வலி ஏற்பட்ட இடத்தில் இயங்காமல் இருந்த சதைகள் இலகுவாகி, நரம்புகள் தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீரடையும்.