ஆரோக்கியம்புதியவை

உங்களுக்கு வயிற்றின் இடது பக்கத்தில் அடிக்கடி வலிக்குதா? இந்த காரணங்களால் கூட இருக்குமாம்!

உங்களுக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலி ஏற்படும் போது அதைன சாதாரணமாக விட்டுவிட கூடாது. ஏனெனில் இது குறிப்பிட்ட நோய்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

ஆரம்பத்திலேயே அதைக் கவனித்து, சிகிச்சைப் பெற்று வந்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம்.

எனவே உடனே அதற்கான காரணத்தை மருத்துவரிடம் சென்று தெரிந்து கொள்ளுவது நல்லது. அந்தவகையில் ஏன் வயிற்றின் இடது பக்கத்தில் வலி எடுக்கும் என்ற காரணத்தை பார்ப்போம்.

  • சிறுநீர் பாதையில் தொற்றுகள் இருந்தால், அடிவயிற்றின் இடது பக்கமாக வலியை சந்திக்க நேரிடும்.
  • அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் சிறுநீர்ப்பை அழற்சி ஆகும். இந்த நிலை ஒருவருக்கு இருந்தால், அடிவயிற்று வலியுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும்.
  • மலச்சிக்கலுடன், வயிற்றில் வாய்வு அதிகமாக தேங்கி அசௌகரியத்தை உணர்ந்தால், அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படும்.
  • குடலில் அழற்சி இருந்து, அசாதாரண இடைவெளியில் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளது என்று அர்த்தம். இந்நோய் இருந்தால், அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலிக்கும்.
  • கிரோன் நோயின் முக்கிய அறிகுறியே அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலிப்பது தான். இது செரிமான பாதைகளில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும்.
  • சிறுநீரக கற்கள் இருந்தால், இடுப்பு மற்றும் அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரக்கூடும்.
  • திருமணமாகி கருத்தரித்த பெண்களுக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், சிசு கருப்பையினுள் வளராமல், இடது பாலோப்பியன் குழாயினுள் வளர்கிறது என்று அர்த்தம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker