சமையல் குறிப்புகள்புதியவை

அவல் உப்புமா

தேவையானவை:

அவல் – 500 கிராம்,

கடுகு – 30 கிராம்,

கடலைப்பருப்பு – 50 கிராம்,

முந்திரிப் பருப்பு – 50 கிராம்,

எண்ணெய் -150 மி.லி,

தண்ணீர் – 650 மி.லி,

வெங்காயம் – 250 கிராம்,

காலிஃப்ளவர் – 150 கிராம்,

பச்சை பட்டாணி – 50

கிராம், கேரட் – 200 கிராம்,

பீன்ஸ் -100 கிராம்,

பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – தலா 25 கிராம்,

கறிவேப்பிலை -15 கிராம்,

பொடியாக நறுக்கிய இஞ்சி -20 கிராம்.

செய்முறை:

  • காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • இதில், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, காய்கறிகளை நறுக்கிச் சேர்த்துக் கிளறவும்.
  • கடைசியில் அவல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
  • சில நிமிடங்களுக்கு பிறகு கொத்த மல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker