ரொமான்ஸ் என்பது காதலை உயிரோடு வைத்திருக்கும் ஒரு உறவின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். சிலர் தங்கள் கூட்டாளர்களை கவர்ந்திழுக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டாலும், இன்னும் சிலர் ரொமான்டிக்காகவே பிறக்கிறார்கள். அந்த வகையில் உங்கள் துணை எந்த வகையைச் சேர்ந்தவர் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இந்த சந்தேகத்திற்கு உங்கள் துணையின் ராசி உங்களுக்கு உதவலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் தங்கள் ரொமான்டிக் குணம் மூலம் தங்களுடைய காதலை மேலும் அழகானதாக மாற்றுவார்கள். மிகவும் ரொமான்டிக் மற்றும் கனவில் எதிர்பார்க்கும் காதலர்களை உருவாக்கும் ஏழு ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ரொமான்டிக்காக இருக்கவே பிறந்தவர்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் காதல் வாழ்க்கையில் புதிய கற்பனைகளை கொண்டுவந்து அதனை செயல்படுத்த முயற்சிப்பார்கள். மற்றவர்களுடன் ஓப்ப்டிடும்போது இவர்களின் காதல் கற்பனைகள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். திரைப்படங்களில் வருவது போல காதலிக்க இந்த ராசிக்காரங்களால்தான் முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமான மனிதர்கள் மற்றும் காதல் அவர்களின் நரம்புகள் வழியாக ஓடுகிறது. அவர்கள் இயற்கையாகவே மிகவும் கற்பனையானவர்கள் மற்றும் அவர்களின் உறவில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர கூடுதல் தூரம் செல்ல தயங்க மாட்டார்கள். மேலும், அவர்கள் விசுவாசமான மற்றும் பரிவுடன் கூடிய உறவை உருவாக்குகிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒருவரை காதலிக்கும்போது, அவர்களின் உலகம் முழுவதும் அந்த நபரைச் சுற்றி வருகிறது. அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை மனதில் வைத்து அதற்கேற்ப ஒரு நிகழ்வை திட்டமிடுவார்கள். நீங்கள் இருவரும் சந்தித்த நாள், முதல் முறை வெளியே சென்றது, இருவரும் பார்த்த முதல் திரைப்படம் என இவர்கள் ஒவ்வொரு தேதியையும் நினைவில் வைத்து அந்த நிகழ்வைக் கொண்டாடுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பற்றிய சிறப்பான விஷயம் என்னவெனில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன நிகழ்வுகளில் கூட ரொமான்ஸை தேடுவார்கள். ஒரு நாள் உங்களுக்காக பிடித்த பரிசை கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்கள், மறுநாள் உங்களுக்கு பிடித்ததை சமைத்துக் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்கள். அவர்களுடன் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்ற முயல்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்ட காதலர்கள் மற்றும் கண்மூடித்தனமான ரோமன்ஸ் எண்ணம் கொண்டவர்கள். அவர்கள் இயற்கையாகவே மிகவும் சிந்திக்கிறார்கள் மற்றும் தங்கள் கூட்டாளர்களை நேசிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ரொமான்ஸ் என்பது டேட்டிங் அல்லது அற்புதமான உடலுறவுக்கு மட்டுமல்ல. உங்களின் தேவைகளை நீங்கள் சொல்லாமலேயே அவர்கள் புரிந்து கொள்வார்கள். உண்மையான நண்பரைப் போல உங்களை வழிநடத்துவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களை பொறுத்தவரை ரொமான்ஸ் என்று வரும்போது, அவர்களின் செயல் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகிறது. அவர்கள் உங்களை கவர்ந்திழுப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள், மேலும் உங்கள் துயரங்களைத் துடைக்க முயற்சிப்பார்கள். ரொமான்ஸ் பற்றிய அவர்களின் யோசனை ஒரு சாகச பயணத்தை போன்றதாக இருக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் உண்மையான காதலில் நம்பிக்கைக் கொண்டவர்கள் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட காதலர்களாக இருப்பார்கள். நீங்கள் குறைவாக எதிர்பார்க்கும்போது அவை இனிமையான விஷயங்களை கிசுகிசுப்பார்கள், நீங்கள் அரை தூக்கத்தில் இருக்கும்போது உங்களை முத்தமிடுவார்கள், உங்களுக்காக ஒரு ஆச்சரியமான பிறந்தநாள் விழாவை தயார் செய்வார்கள். அவர்கள் ஒரு தீவிரமான உறவில் இருக்கும்போது முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பார்கள்.