ஆரோக்கியம்புதியவை
தினமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி செய்யுங்கள்: நிகழும் மாற்றத்தை உணருவீர்கள்
பொதுவாக தலைவலி உண்டாவதை தடுத்து எந்த பக்கவிளைவுகளும் இன்றி உடலினை பாதுகாத்து கொள்ள இயற்கை முறைகளே மிகவும் சிறத்தது.
புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் இடத்தை மூன்றாவது கண் என்று சொல்வார்கள். அந்த இடத்தில் இருக்கும் புள்ளியை கண், மூக்கு, புருவம் போன்றவற்றிற்காக மையப் புள்ளியாக விளங்குகிறது.
மேலும் அதிக நேரம் கணணி அல்லது லேப்டாப்பினை பார்த்து கொண்டே இருப்பதால் ஏற்படும் தலைவலி தடுக்க கண்ணின் இரு புருவங்களுக்கு இடையில் உள்ள நெற்றிக்கண் என்னும் புள்ளியில் 2 நிமிடம் அழுத்தம் கொடுப்பதின் மூலம் தலைவலி குறையும்.
செய்யும் முறை
- முதல் முறையில் ஆள்காட்டி விரலால் மூன்றாவது கண் இடத்தை 60 நொடிகளுக்கு அழுத்த வேண்டும்.
- இரண்டாவது முறையில் ஆள்காட்டி விரலால் இரு புருவங்களுக்கு மத்தியில்அழுத்தி வட்ட வடிவில் விரலை எடுக்காமல் அழுத்தம் கொடுங்கள்.
பலன்கள்
- காதிற்கு கழுத்திற்கும் இடைப்பட்ட புள்ளியானது கண், காது மற்றும் மூக்குடன் தொடர்பினை கொண்டது. இங்கு அழுத்தத்தினை கொடுக்கும் போது ஒற்றை தலைவலி கூட குறையும்.
- மூக்கிற்கு அருகில் கண்களின் பாதியில் உள்ள புள்ளியில் அழுத்தத்தினை கொடுக்கும் போது மன அழுத்தம், தலைவலி போன்றவை குறையும்.
- இரு புருவங்களுக்கு கீழே அழுத்தத்தினை கொடுக்கும் போது தலைவலி, சைனஸ், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
- மேலும் ஞாபக சக்தியை அதிகப்படுத்த முதலில் பின்னந்தலையின் அடிப்பகுதியிலுள்ள இந்த இரு புள்ளிகளையும் விரல் நுனிகளால் அழுத்தம் தர வேண்டும். பின்னர் விரல் முட்டிகளால் அந்த புள்ளிகளில் மசாஜ் செய்ய வேண்டும்.
- இதனை தினமும் செய்யும்போது நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இது ரத்த நாளங்களை தூண்டி சரும நோய்களுக்கு நல்ல பலனைத் தருகிறது.