கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ப்ரௌனி ரெசிபி
தேவையான பொருட்கள்:
* மைதா – 1/2 கப்
* உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப்
* சர்க்கரை – 3/4 கப் * முட்டை – 2
* கொக்கோ பவுடர் – 1/3 கப்
* வென்னிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
* சாக்லேட் சிப்ஸ் – 1 கப்
* உப்பு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஓவனை 180 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பேக்கிங் ட்ரே/பேனை எடுத்து, அதன் மேல் அலுமினியத் தாளை விரித்து, மேலே எண்ணெயைத் தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு பேனில் வெண்ணெயைப் போட்டு அடுப்பில் வைத்து, குறைவான தீயில் உருக வைக்கவும். * பின் அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இப்போது அதில் கொக்கோ பவுடர், வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறிவிட வேண்டும்
* பின்பு அதில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
* பின் அதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அடுத்து அதை எண்ணெய் தடவிய அலுமினியத் தாளில் ஊற்றி தட்டையாக பரப்பிவிடவும்.
* பிறகு அந்த ட்ரேயை ஓவனில் வைத்து, 20 நிமிடம் பேக்கிங் செய்து எடுத்தால், சுவையான சாக்லேட் ப்ரௌனி தயார்.