ஆரோக்கியம்புதியவை

தினமும் இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவதுதான் உங்கள் பழக்கமா..? இதை மாற்றிக்கொள்ளாவிட்டால் ஆபத்து உங்களுக்குத்தான்..!

தினமும் இரவு நேரம் தாழ்த்தி சாப்பிடுவதால் மார்பகப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது என International Journal of Cancer நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களின் தூக்க நேரம் மற்றும் உணவு நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கேள்விகளை தொகுத்துள்ளது. அதில் 872 ஆண்களும், 1321 பெண்களும் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 621 பேருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் அறிகுறியும் 1205 பேருக்கு மார்பகப் புற்றுநோய் அறிகுறியும் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தனித்தனியே 9 மணிக்கு முன் சாப்பிடுவோர், 10 மணிக்கு பின் சாப்பிடுவோர் எனக் கணக்கிட்டுள்ளது.

அதேபோல் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்குவோர், சாப்பிட்ட பின் 2 அல்லது 3 மணி நேரம் கழித்து சாப்பிடுவோரின் உடல் நலனையும் கண்கானித்துள்ளது.

அதில் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவு, எளிதில் செரிமானிக்காத உணவுகளை இரவு நேரம் தாழ்த்தி சாப்பிடுவதால் எளிதில் புற்றுநோய், இதய நோய்க்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறது.

குறைவான அளவில் , எளிமையான உணவுகளை சாப்பிட்டால் அதன் தாக்கத்தை சற்று குறைக்கலாம் என்கிறது. இருப்பினும் இந்த ஆய்வில் கூடுதல் தகவல்களை சேகரிக்க இந்த குழு முயன்று வருவதாகக் கூறியுள்ளது.

நினைத்த நேரத்தில் சாப்பிடுவதால் மனித கடிகாரம் உடல் உறுப்புகளுக்கு இடும் கட்டளையானது தடைபடுகிறது. இதனால் உறுப்புகள் அதன் வேலையை செய்ய முடியாமல் உண்ட உணவை செரிமானிக்க துவங்குவதால் கழிவுகளை வெளியேற்ற நேரம் கிடைப்பதில்லை. எனவே கொழுப்புகள் சேர்வது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். அதோடு புற்றுநோய் ஆபத்தையும் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker