ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

அல்சர் பிரச்சனையால் கஷ்டப்படுறீங்களா? இதை போக்க இதோ சில எளிமையான வீட்டு வைத்தியம்

இன்றைய அவசர வாழ்க்கை சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்சினையில் ஒன்று தான் அல்சர்.

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே அல்சர் எனப்படும்.

இதனை போக்க அடிக்கடி மருந்துகளை எடுக்க தேவையில்லை. சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.
  • காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. இதேபோன்று தினமும் ஆப்பிள் ஜீஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
  • நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
  • தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்னை சரியாகும்.
  • வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.
  • வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
  • வாய்ப்புண்ணுக்கும், வயிற்றுப்புண்ணுக்கும் அருமருந்து என்று சொல்லகூடியது அகத்திக்கீரை. கசப்பு மிகுந்த அகத்திக்கீரையில் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புகள், மாவுசத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகள் உண்டு.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker