ஆரோக்கியம்புதியவை

கழுத்துவலி எளிய முறையில் நீக்க வேண்டுமா? இந்த யோகப் பயிற்சிகள் செய்தாலே போதும்

இன்று வேலைக்கு செல்லும் பெரும்பாலோனோர் அன்றாடம் கழுத்து வலியால் பெரும் அவதிக்குள்ளாகுவதுண்டு.

இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற நரம்புகள் கழுத்து பகுதியில் தான் உள்ளது. அந்த நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும்போது தான் கழுத்து வலி ஏற்படுகிறது.

ஒருவருக்கு கழுத்து வலி வந்தால், அது மிகுந்த எரிச்சலை உண்டாக்குவதோடு, எந்த ஒரு வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் செய்துவிடும்.

இதனை போக்க சில எளியமுறையில் செய்ய கூடிய யோகாப்பயிற்சிகள் சில உள்ளன. தற்போது அவற்றி சிலவற்றை இங்கு பாரப்போம்.

பயிற்சி 1
 • விரிப்பில் சாதாரணமாக கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
 • கண்களை மூடிக் கொள்ளுங்கள். இரு கைகளிலும் சூன்யமுத்திரை செய்யவும். அதாவது நமது நடுவிரலின் மேல் கட்டை விரலை வைத்து, கட்டை விரலால் லேசான அழுத்தம் கொடுக்கவும்.
 • மீதி விரல்கள் நேராக இருக்க வேண்டும். இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும்.
 • அப்பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணன் உடலில் செல்வதாக எண்ணவும். உடன் மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளியிடவும்.
 • அப்பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன், அழுத்தம் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணவும். இதுபோல் பத்துமுறைகள் செய்யவும்.
 • இப்பொழுது உங்களது மூச்சோட்டத்தை கழுத்துப்பகுதி முழுவதும் நன்கு பரவுவதாக எண்ணி இரண்டு நிமிடம் கழுத்துப் பகுதியில் கவனம் செலுத்தவும்.
 • பின் மெதுவாகக் கண்களை திறந்து கொள்ளவும். கை விரல்களை சாதாரணமாக வைத்துக் கொள்ளவும்.
பயிற்சி 2
 • விரிப்பில் முதலில் நேராகப் படுத்துக் கொள்ளவும்.
 • இரு கால்களை யும் மடக்கவும். ஒரு அடி இடைவெளிவிட்டு கால் பாதங்கள் தரையில் இருக்கவும்.
 • இரு கைகளை யும் குதிகால் பக்கத்தில் கைவிரல் படும்படி வைக்கவும்.
 • இப்பொழுது மூச்சை உள் இழுத்துக் கொண்டு இடுப்பை மட்டும் உயர்த்தவும்.
 • இந்நிலையில் பத்து விநாடிகள் மூச் சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்ய வேண்டும்.
பயிற்சி 3
 • விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். இப்பொழுது இருகைகளையும் கோர்த்து காதோடு உயர்த்தி படத்திலுள்ளது போல் தலைக்கு மேல் வைக்கவும். கை விரல்களும் பின்னி உள்ளங்கை வானத்தைப் பார்க்க வேண்டும்.
 • கைகள் காதோடு சேர்ந்து நேராக படத்திலுள்ளது போல் இருக்க வேண்டும்.
 • இப்பொழுது இரு நாசி வழியாக மூச்சை உள் இழுக்கவும். உடன் இருநாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.
 • முதலில் 5 முறைகள் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் 5 முறைகள் வேகமாக மூச்சை உள் இழுத்து வேகமாக மூச்சை வெளிவிடவும்.
 • பின் மீண்டும் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக 5 முறைகள் மூச்சை வெளிவிடவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker