எண்ணெய் வழியாமல் முகம் ஜொலி ஜொலிக்க இதை ட்ரை பண்ணுங்க!
அந்த காலத்து தமிழ் பெண்கள் முகத்தை கடலை மாவு போட்டு கழுவி, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள். தற்போதுள்ள பெண்கள் பவுன்டேஷன், கிரீம், பவுடர், லிப்ஸ்டிக், மஸ்காரா, ஸ்டிக்கர் பொட்டு என்று எத்தனை பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
முகம் எப்போதும் பொலிவுடன் தோன்ற வேண்டும். முகம் சோர்வாக காணப்படுபவர்களிடம் சுறுசுறுப்பு எட்டிப்பார்க்காது.
கடுமையான வேலை செய்து களைத்து போய் இருப்பவர்களிடமும் புத்துணர்ச்சி கரைந்து போயிருக்கும். முக பொலிவுக்கும், சோர்வுக்கும் தொடர்பு இருக்கிறது. சோர்வாக காட்சியளிப்பவர்கள் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வதன் மூலம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
முட்டையின் வெள்ளைக் கரு:
புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம்.
தேன்:
முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க தேன் உதவும். மேலும், முகப்பருக்கள் வராது தடுக்கும். சருமத் துளைகளை திறந்து மிகுதியாக உள்ள எண்ணெயை நீக்கிவிடும். தேனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
பாதாம் :
2 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடியை, பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து அதனுடல் பால் கலந்து மாஸ்க் போல் போட்டு வாருங்கள். வாரம் மூன்று நாட்கள் இப்படி செய்து வந்தால் முகம் எந்த வித தழும்பின்றி பிரகாசமாக இருக்கும். படிப்படியாக நிறம் மெருகேறுவதை காண்பீர்கள்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருட்கள். எனவே, இவை சருமத்திற்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
முல்தானிமெட்டி
முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வர, முகம் புத்துணர்வு பெறும். கோடை காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்க தயிரை முகத்தில் பூசி வரலாம். பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் சருமம் புதுப்பொலிவு பெறும்.
குறிப்பு
- இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்குங்கள். ஒழுங்காகத் தூங்கினாலே முகம் தெளிவாக இருக்கும். இல்லையென்றால் நீஙகள் என்னதான் மேக்கப் போட்டாலும் முகம் சோர்வாகவே காணப்படும்.
- ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தடவை முகத்தை குளி்ர்ந்த நீரால் கழுவுங்கள். வெளியே சென்றுவிட்டு வந்தால் முகத்தை கழுவுங்கள்.
- நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிப்பதால் தோல் அவ்வளவு சீக்கிரம் சுருங்காது