இங்கு ஒரு சரியான உறவு ஒரே இரவில் யாருக்கும் அமைந்துவிடாது. நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உறவை உருவாக்க பொறுமை, காதல், தைரியம் ஆகியவை நிச்சயம் தேவைப்படும். முக்கியமாக நீங்களும் உங்கள் கூட்டாளரும் புரிதலுடன் இருக்க வேண்டும். சரியான வழியை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று. இரவு உணவிற்கு சரியான அலங்காரத்தை அமைப்பது, அவர்களை பாதுகாப்பாக உணரச்செய்வது போன்ற காதலுடன் கலந்த உண்மையான விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமாக உங்கள் கூட்டாளரை நீங்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கக்கூடும்.
ஒரு உறவில் இருக்கும்போது தம்பதிகள் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் நிறையப் படித்திருக்கலாம். ஆனால் ஒரு புதிய உறவை சரியான பாதையில் வைத்திருக்க செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலை நாம் அரிதாகவே காண்கிறோம். இல்லையா? நீங்கள் இப்போதுதான் உங்கள் உறவை தொடங்கினீர்கள் என்றால், உறவை மேம்படுத்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
புதிதாக தொடங்க வேண்டும்
நீங்கள் எந்த புதிய உறவையும் தொடங்குவதற்கு முன் உங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கடந்தகால உறவின் மோசமான நினைவுகளை மனதிலிருந்து அழிப்பது நல்லது. உங்கள் கடைசி உறவில் என்ன நடந்தது என்பது குறித்த நச்சு எண்ணங்களிலிருந்து விடுபட்டு, அந்த உணர்ச்சிகளை நீக்கிவிட வேண்டும். ஏனெனில் நீங்கள் கடந்த காலங்களில் சிக்கிக்கொண்டால் அது நிகழ்காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது உங்கள் நிகழ்கால துணைக்கு நியாயமற்றது. உங்கள் காதல் வாழ்க்கை பிரகாசமாக பிரகாசிக்க விரும்பினால், நீங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, புதிதாக தொடங்க வேண்டும்.
நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்
உங்கள் கூட்டாளியின் நண்பர்களைச் சந்திப்பது அல்லது அவரை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கொருவர் நண்பர்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் நீங்களும் உங்கள் கூட்டாளியும் சிறப்பாக இருக்க முடியும். இது அவர்களுடன் வலுவான சமூக பிணைப்பை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும். மேலும், பொதுவான நண்பர்களைக் கொண்டிருப்பது தம்பதிகள் தங்கள் உறவை வலுப்படுத்திக்கொள்ள ஒரு சிறந்த வழியாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இலக்குகளை அமைக்கவும்
நாம் அனைவரும் ஒரு உறவிலிருந்து சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளோம். அவ்வாறு ஒப்புக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் தவறான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது உறவையே முறித்துவிடும். இதுபோன்ற யோசனையை கைவிட்டு, வாழ்க்கையின் யதார்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சிறந்த உறவில் வாதங்கள், காதல், விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் தியாகங்கள் இருக்கும். உங்கள் உறவு சிறப்பாக அமையும் வேண்டுமென்றால், நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அமைக்காமல் உங்கள் உறவின் அடித்தளத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.
முன்னாள் காதலை மறந்துவிடுங்கள்
இதுகுறித்து உங்களுக்கு ஒரு நிபுணரின் ஆலோசனை தேவையில்லை. ஆனால் நீங்கள் உங்கள் முன்னாள் கூட்டாளருடன் தொடர்ந்து உரையாடுகிறீர்கள் அல்லது உங்கள் தற்போதைய கூட்டாளருடனான உரையாடலின் போது அவரைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது உங்கள் உறவுக்கு அழிவைத் தரக்கூடும். தற்போதைய உங்கள் உறவு நீண்ட காலம் நீடிக்க விரும்பினால், உங்கள் முன்னாள் காதலை பற்றி சுத்தமாக மறந்துவிடுங்கள். உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை உங்கள் தற்போதைய கூட்டாளருடன் ஒப்பிடுவது இருவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். நிகழ்கால உறவில் கசப்பை ஏற்படுத்தும்.
அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
நீங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது எந்தெந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கலாம் என்று யோசிக்கலாம். ஆனால், உறவு அப்படியல்ல. ஒரு உறவு என்பது இரண்டு நபர்களுக்கிடையேயான புரிதலை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் கூட்டாளரை மாற்ற முயற்சிப்பது மிகவும் தவறானது. அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
அனைத்தையும் மாற்றுவது
இதுபோன்ற உடையைதான் நீங்கள் அணிய வேண்டும் என்று அவர்களுடைய உடைகளை மாற்றுவது, அவரது உணவுப் பழக்கத்தை மாற்ற முயற்சிப்பது அல்லது இசையில் அவரது ரசனையை மாற்றுவது போன்ற செயல்கள் உங்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தி உறவில் விரிசலை ஏற்படுத்தும். இதுபோன்ற நடவடிக்கைகள் நீண்ட கால உறவுக்கு வழிவகுக்காது.
உண்மையாக இருப்பது
நீங்கள் மிகவும் உண்மையாகவும், சுயத்தன்மையுடன் இருப்பது நல்லது. இது வெளிப்படைத்தன்மையை பராமரிக்க உதவும். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு நம்பிக்கை சிக்கல்கள் இருந்தால் அல்லது கோபமாக இருந்தால், அதைப் பற்றி உங்கள் கூட்டாளருக்கு தெரியப்படுத்துங்கள். மனம்விட்டு பேசுங்கள். உங்களுக்குள் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் ஒரு ஆரோக்கியமான உறவுக்கு மிக அவசியம்.