தலைமுடி மென்மைத் தன்மையை இழந்து கடினமாக இருக்கிறதா..? இந்த வீட்டுக் குறிப்புகளை செய்து பாருங்கள்
தலைமுடி கடினமாக இருந்தால் சீப்பு பயன்படுத்த முடியாதபடி வலி இருக்கும். முடியை தொடவும் பிடிக்காது. இதை சமாளிக்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்திய எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.
கற்றாழை : கற்றாழை சதை இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதை தலையில் தடவி மசாக் செய்து 25 நிமிடங்கள் ஊற வைத்து பின் அலசிவிடுங்கள்.
முட்டை : முட்டையில் வெள்ளைப் பகுதியை தலை முடி வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். பின் 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பூ பயன்படுத்தி கழுவிவிடுங்கள். வாரம் 1 அல்லது 2 முறை இப்படி செய்ய தலைமுடி மென்மையாக இருக்கும்.
அவகேடோ : அவகேடோ மற்றும் வாழைப்பழம் இரண்டையும் மசித்து தலைமுடி வேர்களில் தடவி மசாஜ் செய்துவிட்டு 30 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். பின் ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒரு முறை இதை பின்பற்றுங்கள்.
நெல்லிக்காய் : நெல்லிக்காயை பேஸ்ட் போல் அரைத்து அதில் ஒரு எலுமிச்சை பழ சாறு பிழிந்து கலந்துவிட்டு தலைமுடி வேர்களில் தடவுங்கல். காய்ந்து தானாக உதிரும்போது தலையைக் குளித்து அலசிவிடுங்கள்.
வெந்தயம் : வெந்தயம் இரவு ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் வேர்கள் மற்றும் முடிகளில் தடவி 30 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தலையை ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.