சில்லி எக்ஸ்
தேவையான பொருட்கள் :
வேக வைத்த முட்டை – 6
எண்ணெய் – 1 tbsp
பூண்டு – 2 பற்கள்
இஞ்சி – 1 துண்டுவெங்காயம் – 1
குடை மிளகாய் – 1
காய்ந்த மிளகாய் – 6
உப்பு – 1/4 tsp
மிளகு – 1/2 tsp
வினிகர் – 1 tsp
சோயா சாஸ் – 2 tsp
சில்லி சாஸ் – 1 1/2 tbsp
டொமேடோ சாஸ் – 2 tbsp
சோள மாவு – 1/4 கப்
ஸ்பிரிங் ஆனியன்
மைதா – 1/4 கப்
செய்முறை :
முதலில் மைதா மற்றும் சோள மாவு இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி அதோடு உப்பு மற்றும் மிளகுத்தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். அதே அளவில் மைதா மற்றும் சோள மாவு மற்றொரு பாத்திரத்தில் கலந்து, உப்பு மற்றும் மிளகுத்தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து பஜ்ஜி மாவு போல் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
முட்டைகளை வறுக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.
தற்போது முட்டையை நான்கு பாகங்களாக அறுத்துக்கொள்ளுங்கள். அதை தற்போது மாவில் பிரட்டி எடுத்து பின் பஜ்ஜி மாவு போல் கலந்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து காய்ச்சி வைத்துள்ள எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து எடுங்கள். இப்படி ஒவ்வொன்றாக செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் விட்டு பின் அதில் இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கிபோடுங்கள்.
பின் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்ததாக சிவப்பு மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்குங்கள். பின் உப்பு, மிளகு சேர்த்து வதக்குங்கள்.
தற்போது அனைத்து சாஸ் வகைகளை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
தற்போது சோள மாவை கொஞ்சம் தண்ணீரில் கலந்து அதையும் ஊற்றிக்கொள்ளுங்கள். இது கெட்டிப்பதம் கிடைக்கும்.
அடுத்ததாக வறுத்தெடுத்த முட்டையை சேர்த்து பிரட்டி எடுங்கள். இறுதியா ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறுங்கள்.
சுவையான சில்லி எக்ஸ் தயார்..!