அழகு..அழகு..புதியவை
பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை போக்கும் ஆரஞ்சு பழச்சாறு
ஆரஞ்சு பழமானது சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் சருமத்தின் இளமையைப் பாதுகாப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு பளிச்சென்று வெளிக்காட்டும்.
ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து பொடி செய்து, பின் அதில் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது சந்தன பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
ஆரஞ்சு பழச்சாற்றினை சிறிது எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமமானது பொலிவோடு இருக்கும்.
மைதாவில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாற்றில், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.