ஆரோக்கியம்புதியவை

ஆண்களை ஏன் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கணும்-ன்னு சொல்றாங்க… அதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

பிஸியான ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க பெரிதும் விரும்பலாம். ஏனெனில் அவர்கள் ஓய்வெடுக்கக்கூடிய ஒருசில தருணங்களில் இதுவும் ஒன்றாகும். அதனால் இது அவர்களுக்கு சிறந்ததாக இருக்கலாம். முன்பெல்லாம் ஆண்கள் உட்கார்ந்து தான் சிறுநீர் கழிப்பார்கள். ஆனால் நாகரீகம் வளர ஆரம்பிக்கும் போது, ஆண்களின் இந்த பழக்கம் அப்படியே மாறிவிட்டது.

அதற்கேற்ப தற்போது அனைத்து நிறுவனங்களிலும் ஆண்கள் நின்று கொண்டே சிறுநீர் கழிக்கும்படியான வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தலைமுறையினர் பலருக்கு உட்கார்ந்து கொண்டும் ஆண்கள் சிறுநீர் கழிக்கலாம் என்ற ஒரு விஷயமே தெரியாமலும் இருக்கலாம். கீழே ஆண்கள் ஏன் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுநீர்ப்பையின் ஆரோக்கியம் மேம்படும்

புரோஸ்டேட் பிரச்சனைகள் உள்ள ஆண்கள், உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது அவர்களின் சிறுநீர்ப்பைகளை திறம்பட காலி செய்ய உதவுவதோடு, நீர்க்கட்டிகள் மற்றும் பிற உடல்நல சிக்கல்களின் அபாயங்களையும் குறைக்க உதவும்.

புரோஸ்டேட் பெரிதாக உள்ள ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க ஆரம்பிப்பது நல்லது. ஏனெனில் இவர்கள் சிறுநீரை வெளியே தள்ளும் போது, இடுப்பு தசைகளை தளர்த்த உதவ வேண்டும் என்று மத்திய புளோரிடா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் சிறுநீரக மருத்துவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் ஜமின் பிரம்பட் கூறுகிறார்.

ஆண்கள் உட்கார்ந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டுமா?

நீங்கள் சுகாதாரத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுபவராயின், உங்கள் கழிவறை இருக்கையில் சிறுநீர் தெளிப்பதைத் தவிர்ப்பதற்காக சிறுநீர் கழிக்கும் போது உட்கார்ந்து சிறுநீரைக் கழியுங்கள். ஆனால் ஆண்களை உட்கார்ந்து சிறுநீர் கழிக்க சொல்வதற்கு சில நியாயமான காரணங்களும் உள்ளன. அதைத் தெரிந்து கொண்டால், நிச்சயம் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் முறையை மாற்றக்கூடும். இப்போது அவற்றைக் காண்போம்.

ஏன் ஆண்கள் நின்று சிறுநீர் கழிக்கிறார்கள்?

நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது என்பது ஒரு ஆணின் இயல்பான உள்ளுணர்வு மற்றும் அவர்களின் உடலியல் அமைப்பும் அதற்கு சாதகமாக உள்ளது என சில புதிய கண்டுபிடிப்புகள் வலியுறுத்துகின்றன. அதோடு இது ஆண்களுக்கு மிகவும் வசதியாகவும், எளிமையாகவும் இருப்பதால் பெரும்பாலான ஆண்கள் இதைப் பின்பற்றுகின்றனர்.

நின்று சிறுநீர் கழிப்பது சுகாதாரமற்றது

பொதுவாக சிறுநீர் சிதறுவது என்பது சுகாதாரமற்றது. மேலும் இது கடுமையான துர்நாற்றத்திற்கும் வழிவகுக்கும். அதுவே உட்கார்ந்து சிறுநீர் கழித்தால், இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க வாய்ப்பில்லை. இந்த காரணத்தினாலும் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க கூறப்படுகிறது.

நோய்கள் எளிதில் பரவும்

நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதால், சிறுநீர் ஆங்காங்கு தெளித்து துர்நாற்றம் மட்டும் வீசுவது மட்டுமின்றி, அது நோய்களையும் எளிதில் பரப்பும். எப்படியெனில் தெளிக்கும் சிறுநீரானது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு சரியான ஊடகமாக இருப்பதால், நோய்கள் வேகமாக ஒருவரை அண்டும். அதுவே உட்கார்ந்து சிறுநீர் கழித்தால், இம்மாதிரியான நிகழ்வு எதையும் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது, சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாக அனுமதிக்கிறது. இதன் விளைவாக சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றின் அபாயம் குறையும் மற்றும் பிறப்புறுப்பின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இறுதியில், இது ஒரு சிறந்த பாலியல் வாழ்க்கைக்கு பங்களிக்கிறது.

இரண்டுமே நல்லது தான்

உட்கார்ந்து சிறுநீர் கழிப்பது சில உடல்நல பிரச்சனைகளைக் கொண்ட ஆண்களுக்கு சாதகமானதாக இருக்கலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அனைத்து இடங்களிலும் இதைப் பின்பற்றுவது என்பது முடியாத ஒன்றாக இருப்பதால், உங்களுக்கு பொருத்தமானதைப் பின்பற்றுங்கள். இருப்பினும், உங்களால் முடிந்த இடத்தில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க முயலுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker