உறவுகள்டிரென்டிங்புதியவை

உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த மாதிரியான விஷயங்களில் பொய் சொல்லலாம்

கணவன், மனைவி உறவு மிகவும் உன்னதமான ஒன்று. எங்கோ பிறந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைகின்றனர். திருமணத்திற்குப் பிறகு தங்கள் இல்லற வாழ்க்கையை இனிமையாகத் தொடங்குகின்றனர். நிறைய காதல், மோதல்கள், சண்டைகள், சமரசங்கள், சமாதானங்கள், விட்டுக்கொடுத்தல் என அனைத்தும் கலந்த கலவையாக அவர்களின் உறவு இருக்கும். மேலும் கணவன் மனைவி உறவு வலுப்பெற இருவருக்கும் இடையே ஒளிவு மறைவு இருக்கக்கூடாது. இருந்தால், சந்தேகங்கள் அதிகரித்து நிம்மதியைக் கெடுத்துவிடும்.

அதுவே சில விஷயங்களை மனைவியிடம் கணவன் வெளிப்படையாக பேசாமல் இருப்பதும் பிரச்னையாகிவிடும். கணவர் பேசும் பொய்களும் உறவில் விரிசலை உருவாக்கிவிடும். துணையிடம் வெளிப்படையாக இருப்பது அவசியம்தான் என்றாலும், சில விஷயங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது. அப்போதுதான் துணைக்கு புரிதல், நம்பிக்கையோடு உங்கள் மீது மரியாதையும் அதிகரிக்கும். மேலும், கணவன் தன் மனைவியுடன் சில பொய்களைச் சொல்லலாம். அது அவர்களின் உறவை மேலும் அழகானதாக மாற்றக் கூடியதாக இருக்கவேண்டும். அப்படி என்னமாதிரியான பொய்களைச் சொல்லலாம்.

1. உங்கள் மனைவி தயாரிக்கும் உணவு எல்லா நேரங்களிலும் சுவையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்காக அவர்களைக் குறை சொல்லாமல் அவர்களின் முயற்சியை நீங்கள் பாராட்டலாம். இதனால் கணவன் மனைவிக்குள் ஒரு நல்ல புரிதல் ஏற்படும்.

2. திருமணம் ஆன பெண்கள் அல்லது ஆண்கள் பலர் சில மாதங்களிலேயே உடல் பருமனை பெற்றிருப்பர். அந்த நேரங்களில் அவர்களின் உருவத்தை வைத்து கேலிசெய்து தர்மசங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள். உடல் எடையைக் குறைக்க சில வழிகளைச் சொல்லலாம். அல்லது, அவர்கள் மனம் கோணாதவாறு அவர்களுக்கு ஆறுதல் அளிக்கலாம். ”நீ ஒன்றும் அவ்வளவு எடை கூடவில்லை” என பொய் செய்வதில் தவறே இல்லை.

3. உங்கள் அன்புக்குரியவர் ஏதேனும் ஒரு புதிய வகை ஆடையை அணிந்தால் அது அவர்களுக்கு பொருந்தவில்லை என்றாலும் சரி, அவர்களுக்கு அந்த உடை அழகாக இருக்கிறது என்று பொய் சொல்லலாம். அதில் தவறில்லை.4. உங்கள் அன்புக்குரியவர் உங்களுக்காக ஒரு பரிசை வழங்கினால், அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதனைப் பிடிக்கவில்லை என்றாலும் பிடித்திருக்கிறது என பொய் சொல்வதால் அவர்களுக்கு உங்கள் மேல் அக்கறை அதிகரிக்கும். வேண்டாம் என ஒதுக்குவது உறவில் கஷ்டங்களை ஏற்படுத்தும்.

5. சினிமா அல்லது தொலைக்காட்சி பார்க்கும்போது உங்கள் கணவர் விரும்பும் நிகழ்ச்சிகளையோ அல்லது உங்கள் மனைவி விரும்பும் நிகழ்ச்சிகளையோ ஒன்றாக சேர்ந்து பார்க்கலாம். அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் சரி. உங்கள் அன்புக்குரியவர்களுக்காக சில நேரத்தை ஒன்றாக செலவிட்டு பார்க்கலாமே.

6. உங்கள் கணவன் அல்லது மனைவியின் பெற்றோர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவர்களைச் சந்திக்கும்போது அதனை வெளிப்படுத்தாமல் அவர்களிடம் அன்பு செலுத்தலாம்.

7. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதன் காரணமாக சண்டைகள் அதிகம் ஏற்படுகின்றன. அதுவே உங்கள் அன்பானவர் மிகவும் மன அழுத்தத்தோடு இருக்கும்பொழுது அவர்கள் பேசுவதை ஒப்புக்கொள்ளுங்கள். அவர்கள் கருத்து தவறாக இருக்கும் பட்சத்திலும் நீங்கள் அவர் சொல்வது சரிதான் என்று பொய் சொல்லலாம்.

8. சில சமயங்களில் தம்பதியர் பேசிக்கொள்ளும்போது, ஒருவர் முகத்தில் சிரிப்பை வர வைப்பதற்காக நகைச்சுவை ஏதேனும் சொல்லலாம். அது சிரிப்பு வராத அளவுக்கு மொக்கையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எடுத்த முயற்சிக்காக சிரிக்கலாம். அப்போது உங்கள் உறவில் அழகான காதல் உணர்வு மலரும்.

இதுபோன்ற சிறு சிறு விஷயங்களில் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக சில பொய்களையும், அவர்களுக்காக சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்வதும் இருவரின் உறவுகளை இனிமையாக நகர்த்தும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவது வாழக்கையை மேலும் அழகானதாக மாற்றும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker