சமையல் குறிப்புகள்புதியவை

பிரெஞ்சு ப்ரைஸ்

நீங்கள் அடிக்கடி பிரெஞ்சு ப்ரைஸ் வாங்கி சாப்பிடுவீர்களா? என்ன தான் கடைகளில் அதை வாங்கி சாப்பிட்டாலும், அளவாகவே சாப்பிட முடியும். அதுவே அதை வீட்டில் செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா? பலருக்கும் கடைகளில் விற்கப்படும் பிரெஞ்சு ப்ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அதிலும் உருளைக்கிழங்கு பிரியர் என்றால் நிச்சயம் இந்த சமையலை தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.

தேவையான பொருட்கள்:

* உருளைக்கிழங்கு – 2 (பெரியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். அப்படி வெட்டும் போது உருளைக்கிழங்கு மிகவும் தடிமனாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இருக்காமல் பார்த்து வெட்டுங்கள்.

* பின் வெட்டிய உருளைக்கிழங்கை நீரில் ஒருமுறை அலசி விட்டு, குளிர்ந்த நீரில் 10-15 நிமிடம் ஊற வையுங்கள்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

* எண்ணெய் நன்கு சூடானதும், நெருப்பைக் குறைத்துவிட்டு, முதலில் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

* பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளை டிஷ்யூ பேப்பரின் மேல் வைத்து, குளிர வைக்கவும். பின் அதன் மேல் உப்பு தூவி ஒருமுறை பிரட்டி விட்டால், சுவையான பிரெஞ்சு ப்ரைஸ் தயார். இதை தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

குறிப்புகள்:

* சரியான பிரெஞ்சு பிரைஸ் தயாரிக்க வேண்டுமானால், வெட்டிய உருளைக்கிழங்கை ஐஸ் கட்டி நீரில் போட்டு 20-30 நிமிடம் ஊற வைத்து பயன்படுத்துங்கள்.

*கருப்பாகாமல் நல்ல மொறுமொறுப்பான ப்ரைஸ் தயாரிக்க, ஊற வைத்த உருளைக்கிழங்கை 2-3 டிஷ்யூ பேப்பரில் போட்டு நன்கு உலர்த்திவிட்டு, பின் பொரிக்கவும்.

*அதிக அளவு பிரெஞ்சு ப்ரைஸ் செய்யும் போது, முதலில் ஒருமுறை எண்ணெயில் போட்டு அரைவேக்காடாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின் பரிமாற போகும் போது, மீண்டும் பொரித்த உருளைக்கிழங்கை எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker