உறவுகள்புதியவை

மக்களின் நட்புறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா ஊரடங்கு.. ஸ்னாப்சாட் அறிக்கை..

பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்துறையில் கொரோனா தொற்றுநோய் மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. அதேபோல, இந்த கொரோனா தொற்று நோய் மனிதர்களின் நட்பு உறவுகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்னாப்சாட் நடத்திய இரண்டாவது “நட்பு அறிக்கை”-யில் வெளியிடப்பட்ட முடிவுகளில் இதுவும் ஒன்று. அந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நெருங்கிய நண்பர்களுடனான உறவை மாற்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வுக்காக ஆல்டர் முகவர்கள் மற்றும் சமூக வலைத்தளமான ஸ்னாப்சாட், பதினாறு நாடுகளில் இருந்து சுமார் 30,000 பேரை பேட்டி எடுத்தது. அதில் தொற்றுநோய் நெருக்கடி, அதிலும் குறிப்பாக ஊரடங்கு ஆகியவை நட்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி அறிக்கை வெளியிடப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்த உறவுகள் மாற்றப்பட்டாலும், முடிவுகள் என்னவோ எதிர்மறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

தொற்றுநோயின் தொடக்கத்தில் நட்பு மாற்றங்கள் குறித்து 33% பேர் பதிலளித்துளனர். அவர்களில் 47% பேர் தற்போது தங்கள் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பதாக தெரிவித்தனர். அந்த வகையில், புதிய தொழில்நுட்பங்கள் நண்பர்களிடையே தொடர்புகளைப் பராமரிக்க உதவியது. இந்த ஆய்வில் பதிலளித்த மூன்று பேரில் இருவர், தொற்றுநோய் காலத்தில் முன்பை விட அடிக்கடி தொடர்பு கொள்ள ஆன்லைன் சேனல்களைப் பயன்படுத்தியதாகக் கூறினர். மேலும் 49% பேர் ஆழ்ந்த உரையாடல்களில் கவனம் செலுத்தியாக கூறியுள்ளனர்.

தனிமையின் வலுவான உணர்வு :தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நட்புகள் பொதுவாக வலுவாகிவிட்டன. மேலும் மாறாமல் இருந்தன என்று கூட சொல்லலாம். மறுபுறம் ஆய்வில் பதிலளித்தவர்களில் பலர் தனிமையின் உணர்வுகளைக் குறிப்பிட்டனர். கணக்கெடுப்பில் மொத்தமாக பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து தனிமையை உணர்ந்ததாகக் கூறியது. கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பு இருந்ததை விட 8% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருமலின்போது வெளியாகும் நீர்த்துளிகள் 7 மீட்டர் வரை பயணிக்கும்.. அதிகரிக்கும் நோய் பரவல் அபாயம்.. ஆய்வில் தகவல்..

இது குறித்து ஆய்வுக்கு பங்களித்த 17 சர்வதேச நட்பு நிபுணர்களில் ஒருவரான லாவண்யா கதிர்வேலு கூறியதாவது, “என்னதான் ஆன்லைன் செயலி, தொலைபேசி அழைப்புகள் மற்றும் பிற தகவல்தொடர்பு செயலிகள் மூலம் மக்களின் நட்பு பராமரிக்கப்பட்டு வந்தாலும், நேரடி சந்திப்பு மற்றும் அரட்டைகள் இல்லாமல் இருப்பது பலருக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்துவதாக” அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அன்பு மற்றும் வேலையின்மை நட்பை மாற்றியது :

அதேசமயம் தொற்றுநோய் நம் நண்பர்களுடன் பழகும் முறையை கணிசமாக மாற்றிவிட்டது. அதற்கு காரணம் வெறும் தொற்றுநோய் மட்டுமல்ல. பொதுவாக அன்பு என்ற ஒரு விஷயம் நட்புக்கு தீங்கு விளைவிக்கும். ஆய்வில் பதிலளித்த பத்தில் நான்கு வெளிநாட்டினர் ஒரு புதிய காதல் உறவு அவர்களின் நட்பில் தீங்கு விளைவிப்பதாகக் கூறினர். மேலும் இந்த காலத்தில் பெற்றோர்களாக மாறிய 41% பேருக்கும் இதுவே பொருந்தும். இது தவிர வேலை இழப்பு மற்றும் நிதி சிக்கல்களை எதிர்கொண்ட 51% பேருக்கு நட்பு முறை இன்னும் மோசமானது.

அதேபோல, பிற காரணிகளும் நட்பின் மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது. அதில் சமூக இடைவெளி, கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஒரு புதிய நகரத்திற்கு சென்ற 53% பேர், ஒரு புதிய சுற்றுப்புறத்திற்கு சென்ற 39% பேர், கல்லூரிக்குச் செல்வது அல்லது தொழில்முறை காரணங்களுக்காக விலகிச் சென்ற 50% பேர் தங்கள் நட்பின் தூரத்தை மாற்றியதாக தெரிவித்துள்ளனர்.

நட்பு குறித்த இந்த கணக்கெடுப்புக்காக, ஆல்டர் முகவர்கள் 13 முதல் 40 வயதுக்குட்பட்ட 30,000 பேரை நேர்காணல் செய்தனர். அதில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நெதர்லாந்து, நார்வே , சவுதி அரேபியா , ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தேசிய புள்ளிவிவரங்களை குறிக்கிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker