எடுத்துக்காட்டாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபயன்பாட்டு தடுப்பான்கள் (serotonin reuptake inhibitors) எஸ்.எஸ்.ஆர்.ஐ 30 முதல் 40 சதவீத நோயாளிகளுக்கு உடலுறவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் 10 சதவீத ஆண்களுக்கு விறைப்பு தன்மையில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பாலியல் செயல்பாடுகளை மேம்படுத்த மன சோர்வு உள்ளவர்களுக்கு சில வழிகள் உள்ளன. பின்வரும் சில வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் மன சோர்வு உள்ளவர்கள் உடலுறவில் மேம்பாடு அடையலாம்.
மருந்துகள்
மன சோர்வு மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு அவை பாலியல் சிக்கல்களை அதிகப்படுத்துகிறதா அல்லது குறைக்கிறதா என்பதை சிறிது நேரம் காத்திருந்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மருந்தின் அளவை குறைக்கவும்
ஒரு மருந்தை குறைந்த அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் அதன் பாலியல் பக்க விளைவுகளையும் குறைக்க முடியும். இருப்பினும் சிகிச்சை வரம்பில் இருக்கிறவர்களுக்கு மருந்தை குறைப்பது என்பது சவாலான காரியமாக இருக்கும்.
உடலுறவிற்கு அட்டவணை
ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இந்த மருந்துகளின் பக்க விளைவுகள் அதிகமாக இருப்பதாக நோயாளி கண்டறிந்தால் அந்த குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து பக்க விளைவுகள் குறைவாக இருக்கும் சமயத்தில் உடலுறவு செயல்பாடுகளில் ஈடுப்படலாம். அல்லது உடலுறவு இல்லாத சமயத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
மருந்துகளை மாற்றலாம்
சில ஆண்டி டிப்ரசன் மருந்துகள் மற்ற மருந்துகளை விட குறைவாகவே பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு நபர்களுக்கு வித்தியாசமான மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே வேறு மருந்துக்கு மாறுவது இவர்களுக்கு பயனளிக்க கூடும். முதலில் பயன்படுத்தும் மருந்துகள் மன சோர்வை சரிசெய்யாத பட்சத்தில் மட்டுமே மருத்துவர்கள் பொதுவாக மருந்துகளை மாற்ற பரிந்துரைக்கின்றனர் என்றாலும் மோசமான பக்க விளைவுகள் காரணமாகவும் மருந்துகள் மாற்றப்படுகின்றன. எனவே ஒரு மருந்து மூலம் நீங்கள் பக்க விளைவுகளுக்கு உள்ளானால் உங்கள் மருந்துகளை மாற்றுவதே சிறந்தது.
மருந்துகளை சேர்க்கவும்
ஆண்டி டிப்ரசன் மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பாலியல் சிக்கல்களை தீர்ப்பதற்கான பொதுவான தீர்வு பாலியல் ஹார்மோன்களை தூண்டி விடும் மருந்துக்களை உட்கொள்வதாகும். சில்டெனாபில் (வயகரா) மற்றும் தடாலாஃபில் (சியாலிஸ்) போன்ற மருந்துகள் எஸ்.எஸ்.ஆர்.ஐ தூண்டி விறைப்புத்தன்மையை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
உதாரணமாக ஒரு ஆய்வில் ஆண்டி டிப்ரசன் மருந்துகளால் பாலியல் குறைப்பாட்டுக்கு உள்ளான ஆண்களில் 55 சதவீதம் பேர் சில்டெனாபில் எடுத்துக்கொண்ட பிறகு தங்கள் பாலியல் குறித்த முறையில் மேம்பாடு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். ஆனால் பெண்களின் ஒப்பீட்டில் பார்க்கும்போது இது ஏமாற்றமளிக்கின்றன.
பிற மருந்துகளை சேர்ப்பதில் புப்ரோபியனும் (வெல்பூட்ரின்) அடங்கும். இது பாலியல் செயலிழப்பை எதிர்க்கிறது. மேலும் பாலியல் தன்மையை அதிகரிக்கிறது. குறிப்பாக இது பெண்களின் பாலியல் ஆசைகளை அதிகப்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது.
உளவியல் சிகிச்சை
பாலியல் பிரச்சனைக்கு தீர்வு காண பாலியல் சிகிச்சையாளர்களை காணலாம். அவர்கள் பாலியல் குறித்த விஷயங்களில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். பொதுவாக அந்த அளவு பயிற்சி கூட தேவையில்லை. இதற்கு ஒரு மனநல நிபுணர் கூட உதவக்கூடும்.
இந்த சிகிச்சையின் மூலம் பாலியல் கவலைகளை ஆராய்வதற்கும் தேவைகளை அறிவதற்கும், மேலும் உங்கள் துணையின் தேவைகளை தெரிந்துக்கொள்வதற்கும் பாலியல் மற்றும் சிற்றின்ப நடவடிக்கைகளில் திறனை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
மன சோர்வை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் கூட திருப்திகரமான பாலியல் வாழ்க்கையை வாழ முடியும்.
குறிப்பு
சிகிச்சை மேற்கொள்பவர்கள் இது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பிறகு எந்த ஒரு மாற்றத்தையும் பின்பற்றவும்.