புதியவைவீடு-தோட்டம்

கரையான் பாதிப்பில் இருந்து பழங்கால மரச்சாமான்களைப் பாதுகாக்க சில வழிகள்!!!

வீட்டில் மரத்தால் ஆன பொருட்கள் இருந்தால், அவற்றை சரியாக கவனிக்காவிட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தாலோ, அவற்றை கரையான்கள் அரிக்க ஆரம்பித்துவிடும். அதுவும் இந்த கரையான்களானது மரப்பொருட்களில் ஈரப்பதம் அதிகம் இருந்து ஊறி இருந்தால், எளிதில் தொற்றிக் கொண்டு அரிக்க ஆரம்பித்து, மரப்பொருட்களை பாழாக்கிவிடும்.

ஆகவே இப்படி வீட்டில் உள்ள மரப்பொருட்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை அழிப்பதற்கு கண்ட கண்ட கெமிக்கல்களை வாங்கிப் பயன்படுத்தாமல், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிதில் அவற்றை அழிக்கலாம். சரி, இப்போது கரையான்களை அழிப்பதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம். மேலும் வீட்டில் நீண்ட நாட்கள் மரப்பொருட்களை பயன்படுத்தாமல் இருந்தால், அவற்றில் கீழே கொடுக்கப்பட்டதை செய்தால், கரையான்கள் வருவதை தடுக்கலாம்.

சூரிய வெளிச்சம்

மரச்சாமான்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை வெளியில் குறைந்தது 4 மணிநேரமாவது வைக்க வேண்டும். இப்படி வைத்தால், சூரிய வெப்பமானது கரையான்களை அழித்து, எளிதில் வெளியேற்றிவிடும்.

வேப்பிலை

வேப்பிலை பொடியை கரையான் படிந்த மரச்சாமான்களில் தூவினால், அதில் உள்ள கசப்பு மற்றும் மருத்துவ தன்மையினால், கரையான்கள் விரைவில் அழிந்துவிடும்.

உப்பு

உப்பிற்கு கூட கரையான்களை அழிக்கும் சக்தி உள்ளது. எனவே கரையான்களை அழிக்க, இதனைக் கூட பயன்படுத்தலாம்.

மிளகாய் தூள்

மரச்சாமான்களில் கரையான் கூட்டைக் கண்டால், அப்போது அங்கு சிறிது மிளகாய் தூளை தூவினால், கூட்டில் உள்ள கரையான்கள் அழிந்துவிடும்.

கசப்பான பொருள்

கரையான்களுக்கு கசப்பான பொருளின் வாசனை என்றாலே ஆகாது. ஆகவே கரையான் கூட்டை பார்த்தால், அப்போது அந்த இடத்தில் சிறிது பாகற்காய் சாற்றினை தெளித்தால், கரையான் வளராமல் தடுக்கப்படுவதோடு, அழிந்தும்விடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker