இந்த தீபாவளிக்கு உங்களை எப்படி அழகுபடுத்திக்கொள்வது? பிரபல காஸ்டியூம் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் டிப்ஸ்..
பண்டிகையில் புத்தாடையில் ஒரு சூப்பர் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைப்பதுதான் அனைவருடைய முதல் கடமையாக இருக்கும்.
இந்தியாவில் பண்டிகைகள் என்பது பிரிந்து வாழும் குடும்பங்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதுதான் பிரதான சிறப்பு. அந்த சமயத்தில் யாராக இருந்தாலும் தங்களின் அழகை மேம்படுத்திக்காட்டவே விரும்புவார்கள்.
அதோடு அது பண்டிகையைக் கொண்டாடும்போது அழகாக இருப்பதுதானே நமக்கான சுய சந்தோஷம். அன்று யாரேனும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் உடை நன்றாக இருக்கிறது என்று சொன்னால் நாள் முழுவதும் கையில் பிடிக்க முடியாது. அதோடு புத்தாடையில் ஒரு சூப்பர் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைப்பதுதான் அனைவருடைய முதல் கடமையாக இருக்கும். இதற்கெல்லாம் நீங்கள் அழகாக உடை அணிந்து ஜொலிக்க வேண்டாமா? எனவே லேட்டஸ் டிரெண்டிற்கு ஏற்ப டிப்ஸ் அளிக்கிறார் இந்தியாவின் பெருமைமிகு ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா.
மார்டனை நோக்கி நகருங்கள் : தற்போது ஃபியூஷன் ஸ்டைலில் உடையணிவதுதான் டிரெண்ட். எனவே போஹோ சிக் தோற்றத்தை முயற்சிக்கலாம். அதற்கு அழகிய பிரிண்டட் அல்லது பூக்கள் நிறைந்த திடமான நிறம் கொண்ட ஒரு ஸ்கர்ட் அணியுங்கள். அதற்கு மேட்சாக கிராப் டாப் அல்லது நீளமான டாப், டேப்பர்ட் டாப் அணியலாம். இது மாடர்ன் ஸ்டைலை பின்பற்ற பக்காவாக இருக்கும். நீங்களும் டிரெண்டியாக தோற்றமளிப்பீர்கள். இல்லையெனில் ஒரே உடையாக லாங் கவுன் அணியுங்கள். அதுவும் லேட்டஸ்ட் டிரெண்ட்தான்.
பழமை மாறாத புடவை தோற்றம் : புடவை பழமை மாறாதது என்பதால் பண்டிகைக்கு ஏற்றதாக இருக்கும். புடவை எப்போதுமே டிரெண்டியானது. அதை வைத்து எண்ணற்ற ஸ்டைல்களை செய்யலாம். அதன் டிரெண்டி லுக் என்பது உங்களை அலங்கரித்துக்கொள்ளும் முறையில்தான் உள்ளது.
எளிமையாக இருங்கள் : ஓவர் மேக்அப், அலங்கார ஆபரணங்களை விட மினிமலிஸ்டிக் தோற்றம்தான் இன்றைய டிரெண்ட். அதுதான் பண்டிகை சமயத்தில் இடையூறு இல்லாமல் சௌகரியமாக உணர வைக்கும். எனவே உடை தேர்வு, அலங்காரத் தேர்வு இரண்டையும் எளிமையாக தேர்வு செய்யுங்கள். அதேசமயம் தோற்றத்தில் பண்டிகை லுக் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆடை தேர்வு : ஆடைகளை தேர்வு செய்யும்போது அதிக எடை கொண்டது, அதிக லேயர்கள் வைத்து வடிவமைக்கப்பட்டது, சிக்கல்கள் நிறைந்த வடிவமைப்பு, அதிக கிளிட்டர் தோற்றம் போன்றவற்றை தவிர்த்தல் நல்லது. அவை கொண்டாட்டத்திற்கு இடையூறு செய்யலாம். இரவு பார்டி நிகழ்ச்சி இருப்பின் அதற்கு அவை பொருத்தமாக இருக்கலாம்.
வண்ணங்களின் தேர்வு : பிரகாசிக்கும் நிறங்களான வெள்ளை, ஐவரி, பெயிஜ், சால்மன், வெந்தய நிறம் மற்றும் தங்க நிறம் ஆகியவை பண்டிகைக்கு ஏற்றதாக இருக்கும். அதோடு பூக்களின் அச்சு, எம்பராய்டரி வடிவமைப்பு, கோர்வையான டிசைன்ஸ் , ஐவரி நூல் வேலைப்பாடுகள் கொண்ட டிசைன்கள் ஆடைகளில் பதிக்கப்பட்டிருந்தால் அற்புதமாக இருக்கும் என மனிஷ் கூறியுள்ளார்.