புதியவைவீடு-தோட்டம்

கொசுக்கடி தாங்க முடியலையா? இதோ அதைத் தடுக்கும் சில எளிய வழிகள்!

கொசுக்கள் மிகவும் சிறியவை, ஆனால் தொல்லைத்தரக்கூடியவை. கொசுக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வசிக்கும் எவரும், அந்த கொசுக்களை வரவிடாமல் தடுக்கும் பயனுள்ள வழிகளைத் தொடர்ந்து கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.

தற்போது மழைக்காலம் என்பதால், ஆங்காங்கு மழைநீர் தேங்கி, கொசுக்களை அதிகம் வரவழைக்கும். கொசுக்கள் ஒருவரைக் கடித்து துன்புறுத்துவதோடு, பல்வேறு ஆபத்தான நோய்களான மலேரியா, டெங்கு போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கும். கொசுக்கடி ஒருவருக்கு எரிச்சலூட்டுவதோடு, கடுப்பேற்றக்கூடியதாகவும் இருக்கும்.

இத்தகைய கொசுக்களை அழிப்பதற்கு கடைகளில் பல கொசு விரட்டும் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அதிக பணம் செலவழித்து கொசுக்களை வரவிடாமல் தடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டே எளிதில் கொசுக்களை விரட்டலாம். உங்கள் வீட்டிலும் கொசுக்கள் அதிகம் சுற்றினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளின் மூலம் தடுத்திடுங்கள்.

பூண்டு

பூண்டின் நறுமணத்திற்கு கொசுக்கள் அண்டாது. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் சிறிது பூண்டை கொதிக்கும் நீரில் தட்டிப் போட்டு, அந்நீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்திடுங்கள். இதனால் பூண்டு வாசனை வீடு முழுவதும் பரவி, வீட்டிற்குள் கொசுக்களை வரவிடாமல் தடுக்கும்.

துளசி

துளசியின் மணம் கொசுக்களுக்குப் பிடிக்காது. உங்கள் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் துளசி செடி தொட்டியை வைத்து வளர்த்து வந்தால், வீட்டிற்கு கொசுக்களை வரவிடாமல் தடுக்கலாம்.

எலுமிச்சை மற்றும் கிராம்பு

கொசுக்களை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் ஓர் சிறப்பான வழி தான் இது. அதற்கு எலுமிச்சையை இரண்டு பாதியாக வெட்டி, அதில் கிராம்புகளை சொருகி வைத்து, ஒவ்வொரு ஜன்னல் கதவுகளிலும் வைக்க வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருப்பதுடன், கொசுக்கடியில் இருந்தும் விலகி இருக்கலாம்.

வேப்பிலை மற்றும் லாவெண்டர் ஆயில்

வேம்பு எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெயை 1:1 என்ற விகிதத்தில் கலந்து, கை, கால்களில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் அந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், சருமத்திற்கு கொசுக்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

புதினா எண்ணெய்

ஒரு கப் நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஆங்காங்கு தெளித்திடுங்கள். இதனால் புதினா எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீடு புத்துணர்ச்சி அளிக்கும் வாசனையுடன் இருக்கும்.

கற்பூரம்

கொசுக்களை அகற்றும் மிகவும் நம்பகமான தீர்வை அளிக்கும் பொருட்களுள் ஒன்று கற்பூரம். அதற்கு கற்பூரத்தை நீரில் போட்டு, அதில் சில கற்பூரங்களைப் போட்டு கொசுக்கள் அதிகம் உள்ள அறை அல்லது கொசுக்கள் வரும் பகுதியில் வைத்துவிடுங்கள்.

காபி தூள்

நீர் தேங்கியிருக்கும் பகுதிகள் கொசுக்களுக்கு சிறந்த இனப்பெருக்கம் செய்யும் இடமாக அமைகின்றன. உங்கள் வீட்டைச் சுற்றி அல்லது கூரையின் மேல் நீர் குட்டைகள் இருந்தால், அங்கு சிறிது காபி தூளை தூவுங்கள். இதனால் கொசு முட்டை அந்நீரில் இருப்பின், அது தானாக மேற்பரப்பில் மிதந்து, ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.

கொசுக்கள் விரட்டும் தாவரங்கள்

ஃபீவர்ஃப்யூ, சிட்ரோனெல்லா மற்றும் கேட்னிப் போன்ற சில தாவரங்கள் கொசுக்களை விரட்டுவதற்கு அறியப்படுகின்றன. உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் வருமாயின், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் இந்த தாவரங்களை வளர்த்து வாருங்கள்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலை சிறிது நீரில் கலந்து, சருமத்தில் மீது தடவிக் கொள்ளுங்கள். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்த எண்ணெய் கொசுக்களை விரட்டுவதில் சிறந்ததோடு மட்டுமல்ல, கொசுக்கடிக்கும் சிகிச்சை அளிக்கும்.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி செடி கொசுக்களை வீட்டிற்கு வரவிடாமல் தடுக்கும் திறன் கொண்டது. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் கொசுக்கள் வரும் வீட்டு ஜன்னல் பகுதியில் சிறிது ரோஸ்மேரியை மட்டும் வையுங்கள். இதனால் வீட்டிற்கு கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker