காலாவதியான ஆணுறையைக் கண்டறிவது எப்படி..? எளிமையான டிப்ஸ்..!
கருத்தடைக்காக பலரும் பயன்படுத்துவது ஆணுறைதான். அதற்காக மட்டுமின்றி பாலியல் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கவும் இதை பயன்படுத்துகின்றனர். இது எளிதில் கிடைக்கக் கூடியது. அதேசமயம் பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பானது. இருப்பினும் ஆணுறைகள் காலாவதி ஆகும் என்பதே பலருக்கும் தெரிவதில்லை. கடையிலிருந்து அப்படியே வாங்கி வந்து பயன்படுத்துவார்கள். எனவே காலாவதியை கண்டறிவது எப்படி என்று பார்ப்போம்.
தோற்றத்தை கண்டறியுங்கள் : பிரிக்கும் போதே அதன் தோற்றம் இலகுவாக இல்லாமல் இறுக்கமாக இருக்கும். வழவழப்புத் தன்மையின்றி வறண்டு போய் இருக்கும். வாசனையில் மாற்றம் , நிறம் மாறி இருந்தால் அதை தவிர்த்துவிட்டு புதிதாக பயன்படுத்துங்கள்.
பராமரிப்பு : ஆணுறைகளை கண்டபடி பர்ஸ், பாக்கெட் என வைத்துக்கொண்டிருப்பது அதன் ஈரப்பதத்தை இழக்கச் செய்யும். கீறல் விழலாம். எனவே அதன் உறைக்குள் இருக்கும்படி குளுர்ச்சியான அல்லது அறையின் வெப்பநிலையில் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
பயன்படுத்தும் முறை : ஆறுறையை பிரிக்கும்போது பாதுகாப்பாக கையாளுவது அவசியம். கத்தரிக்கோல் பயன்படுத்தினால் கவனமாக பிரியுங்கள். ஏனெனில் அது ஆணுறையை கிழிக்கக் கூடும். நகம் பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஓட்டைகள் இருக்கிறதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
காலாவதி தேதி : காலாவதி தேதி குறிப்பிட்டுள்ளதா என்பதை வாங்கும்போதே பார்த்து வாங்குவது அவசியம். அதன் பின்னர் கவலைப்படுவதில் அர்த்தமில்லை.
எண்ணெய் தன்மைக் கொண்ட ஆணுறைகளை வாங்காதீர்கள். அது எளிதில் கிழியக் கூடும். கீறல்கள் விழலாம்.