அழகு..அழகு..புதியவை

பால் போன்ற சருமம் கிடைக்க இதை முயன்று பாருங்கள்

தக்காளி பார்க்க எத்தனை அழகா இருக்கிறதோ அத்தனை ஆரோக்கிய மற்றும் அழகுகளை தனது குண்டு உடம்பிற்குள் ஒளித்து வைத்திருக்கிறது. தக்காளியில் இருக்கும் லைகோபீன் உடல் நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கக் கூடியது. அதே லைகோபின் உங்கள் சருமம் முதிர்ச்சியடையாமல் காக்கிறது.
தக்காளியில் உள்ள புரதம், மினரல் மற்றும் நார்ச்சத்துக்கள் சரும மற்றும் கூந்தல் அழகிற்கு அவசியாமனதாகிறது. தக்காளியை எப்படி உங்கள் அழகை மேம்படுத்த பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

நன்மைகள் :

சாதரணமாக சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது என்று மருத்துவர்கள் தக்காளி பழம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

தக்காளியை தினமும் சாப்பிட மட்டுமில்லாமல், . சருமம் இளமையாக இருப்பதற்கு உதவுகிறது. சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கிறது

சருமத்துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். இது ஒருவரின் முகத்தை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும். இதனைத் தவிர்க்க தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும். இப்படி தக்காளியை உங்கள் சருமத்தின் பொலிவை அதிகரிக்க பலவகைகளில் பயன்படுத்தலாம். அவற்றைப் பற்றி காண்போம்.

முகப்பரு மாஸ்க் :

தேவையானவை :

தக்காளி- 1

ஓட்ஸ்- 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

செய்முறை :

தக்காளியையும்,. ஓட்ஸையும் கலந்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். வாரம் 3 நாட்கள் செய்தால் முகப்பருக்கள் குணமாகும். தழும்புகள் மறைந்து விடும்.

நன்மைகள் :

தக்காளி அதிக என்ணெய்ப்பசையை எடுக்கிறது. முகப்பருக்களுடன் செயபுரிந்து அதனை மீண்டும் வரவிடாமல் தடுக்கிறது. கரும்புள்ளி, தழும்புகள் மறைந்து முகம் சுத்தமாகி பளிச்சிடும்.

முடி நேராக்க :

தேவையானவை :

தக்காளி- 2

அவகாடோ – 1/2

தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தக்காளிச் சாற்றினை எடுத்து அதில் அவகாடோவை மசித்து கலக்கவும் , இந்த கலவையில் தேங்காய் எண்ணெய் கலந்து க்ரீம் போல் செய்து அதனை உங்கள் தலைமுடியில் தடவுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

நன்மைகள் :

கலரிங்க், அதிகப்படியான சூடு போன்றவற்றால் கூந்தல் பாதிக்கப்படுகிறது. வறண்டு பொலிவில்லாமல் இருக்கும். இதற்கு தக்காளி பலன் தருகிறது. இது கூந்தலுக்கு பளபளப்பு தரும். கூந்தலுக்கு ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்கு தக்காளி உதவுகிறது.

சரும முதிர்ச்சிக்கு :

தேவையானவை :

தக்காளி- 1

பால்- 2 ஸ்பூன்

தேன்- 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தக்காளியின் சாறு எடுத்து அதில் பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவவும். வாரம் 3 நாட்கள் இப்படி செய்ய வேண்டும்.

நன்மைகள் :

இந்த குறிப்பு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும். சுருக்கங்களைப் போக்கும். சருமத்தில் வயதான பின் உண்டாகும் தொய்வை குணமாக்குகிறது.

மிருதுவான கைகளுக்கு :

தேவையானவை :

தக்காளி – 1

கிளிசரின் – 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

நன்மைகள் :

இப்படி வாரம் 2 முறை செய்தால் உங்கள் கைகள் மிருதுவாக மாறும். கைகளின் உண்டாகும் கருமையை போக்கிவிடலாம் . கிளிசரின் கைகளில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.

வெரிகோஸ் நரம்பிற்கு :

தேவையானவை :

தக்காளி- 3

ஆப்பிள் சைடர் வினிகர் -2 ஸ்பூன்

கற்றாழை – 1 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தக்காளியின் சாறு எடுத்து அதில் ஆப்பிள் சைடர் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து பாதிக்கப்பட்ட வெரிகோஸ் நரம்புகள் இருக்குமிடத்தில் தடவுங்கள். 40 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது போல் தொடர்ந்து வாரத்திற்கு 5 முறை வரை செய்து பாருங்கள்.

நன்மைகள் :

இந்த குறிப்பை தவறாமல் பயன்படுத்தும்போது ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது. பாதிக்கப்பட்ட நரம்புகளில் ரத்த ஓட்டம் தூண்டபடுவதால் வெரிகோஸ் மற்றும் சிலந்தி நரம்புகள் குணமாகிறது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker