அழகு..அழகு..புதியவை
பப்பாளி பலத்தோடு தோலையும் நன்றாக மசித்து முகத்தில் பூசலாம் முகத்திற்கு அழகு தரும் பப்பாளி பழம்
நாம் அனைவருமே நம் முகம் அழகாக இருக்க வேண்டும், பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.
முகத்தில் உள்ள பருக்கள், பருக்களினால் உண்டான கரும்புள்ளிகள், கருவளையங்கள் நம் முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றன. இதற்கான தீர்வை இப்பொது பார்ப்போம்.
பப்பாளி பழம் நாம் அனைவரும் அறிந்த பழம். இது நம் அனைவருக்கும் பிடித்த பழமும் கூட. இதில் பல சத்துக்கள் உள்ளன. பப்பாளி பலத்தோடு தோலையும் நன்றாக மசித்து முகத்தில் பூசலாம். இதனால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் மறைந்து முகம் பளிச்சிடும். நாள்பட்ட காயங்களும் தொற்றுக்களும் உள்ளவர்கள் இந்த கலவையை பூசி பலன் பெறலாம்.