உறவுகள்புதியவை

ஆண்மையை அதிகரிப்பது எப்படி

இன்று நீங்கள் யாரைக் கேட்டாலும் அவர்கள் எல்லாரும் சொல்வது ஓரே ஒரு விஷயம் தான். ஓரே டென்ஷன் என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும். உண்மையைச் சொல்லப் போனால் தற்போது மன அழுத்தம் இல்லாத மனிதர்களையே நீங்கள் பார்க்க முடியாது. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கருததுப்படி மன அழுத்தம் எல்லாரையும் பாதித்து வருகிறது என்கிறார்கள்.
இந்த மன அழுத்தம் நம்பிக்கையின்மையை மட்டும் தருவதில்லை ஊக்கமின்மையையும் தருகிறது என்கின்றனர். இது நமது தினசரி வாழ்க்கையே கேள்விக்குறி ஆக்கி விடுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மன அழுத்தம் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையும் பாதிக்காமல் இருக்குமா என்ன? அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

மன அழுத்தமும் தாம்பத்ய வாழ்க்கையும்
ஒவ்வொருவரும் தினந்தோறும் நிறைய மன அழுத்தம், சோர்வு, நம்பிக்கையின்மை போன்ற பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். ஆனால் நமக்கு இருக்கும் சில குறைபாடுகள் கூட மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக ஆண்களுக்கு இந்த பிரச்சினை அவர்களின் செக்ஸ் வாழ்க்கையையே பாதிக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள்.

நாள்பட்ட மன அழுத்தம்
ஆண்களுக்கு இருக்கும் நாள்பட்ட மன அழுத்தம் அப்படியே அவர்களின் ஆண்மையை பாதிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒரு ஆணுக்கு செக்ஸ் உணர்வு என்பது மூளையில் உள்ள நியுரோட்ரான்ஸ்மிட்டர் மூலம் நடக்கிறது. இந்த நியூரோட்ரான்ஸ் மிட்டர்கள் தான் மூளைக்கு சிக்னலை அனுப்பி செக்ஸ் ஹார்மோனை தூண்டச் செய்து ஆணுறுப்புக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே தான் செக்ஸின் போது தேவையான ஆற்றலும் கிடைக்கிறது. ஆனால் இந்த மன அழுத்தம் உங்கள் எல்லா செயல்களையும் தடுத்து உங்கள் துணையுடன் நீங்கள் சந்தோஷமாக இருக்க விடாமல் செய்து விடும்.

மன அழுத்தத்தின் பாதிப்புகள்
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணுக்கு இந்த நியுரோட்ரான்ஸ்மிட்டர்கள் சரிவர செயல்படுவது இல்லை. இதுவே உங்கள் பாலியல் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கிறது.

ஆற்றல் இழப்பு
மன அழுத்தம் இருந்தால் உங்களுக்கு சோர்வு தான் அதிகம் இருக்கும். இதனாலேயே செக்ஸ் வாழ்க்கையில் உங்களால் ஆற்றலுடன் செயல்பட முடியாது. சோர்வு மட்டும் இல்லாமல் மன அழுத்தம் உங்கள் மனநிலையையே மாற்றி செக்ஸ் ஆர்வம் இல்லாமல் ஆக்கி விடும்.

இன்பம்
கண்டிப்பாக நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் துணையையும் உங்களால் சந்தோஷமாக வைத்திருக்க முடியாது. பிறகு உறவுக்குள் விரிசல் உண்டாகும். பிரிவு ஏற்படலாம்.

உணர்வுகளில் பிரச்சினை
உடலுறவில் உங்களுக்கு குறை இருப்பதால் அதில் நாட்டம் கொள்ள விரும்பமாட்டீர்கள். காலப்போக்கில் அதை தவிர்க்க ஆரம்பித்து விடுவீர்கள். இதனால் உங்கள் துணை ஏமாற்றம் அடைய நேரிடலாம்.

உறவுகளில் சிக்கல்
கணவன் மனைவி உறவு என்றால் அன்பும் அக்கறையுடன் தாம்பத்ய உறவும் முக்கியம். அப்பொழுது தான் இல்லறம் செழிக்கும். ஆண்மை குறைவு பிரச்சினை இருந்தால் உங்கள் துணையை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாத குற்றவுணர்வு ஏற்பட்டு உறவுகளில் சிக்கல்கள் உண்டாக ஆரம்பித்து விடும்.

மன அழுத்த பாதிப்பு
எனவே உங்கள் மன அழுத்தத்திற்கு ஆன்டிடிப்ஸ்ரசன் சிகிச்சைகளை மேற்கொண்டால் ஓரளவிற்கு பலன் கிடைக்கும். இந்த மன அழுத்தத்தை குறைக்க 9 ல் 1 நபர்கள் இந்த ஆன்டிடிப்ஸ்ரசன் சிகிச்சைகளை எடுக்கின்றனர் என்று ஆராய்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது. நிறைய பேர்கள் இதற்கு மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

மருந்துகள்
செரட்ராலைன், ப்ளோக்ஸிடின், பரோக்ஸிடின், சிட்டலோப்ராம், இவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் தடுப்பான்கள் ஆகும். இந்த மருந்துகள் மன அழுத்தத்தை குறைத்து மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் ஒழுங்காக இயங்க உதவுகிறது. இதனால் உங்கள் செக்ஸ் வாழ்க்கையிலும் பாதிப்பு குறைகிறது. செரோடோனின் ஹார்மோன் அதிகரிப்பு ஆண்மையை தடுத்து விடும். எனவே தனி நபர் உச்சக்கட்டத்தை அடைய முடியாமல் போகிறது. அதையெல்லாம் இந்த மருந்துகள் மூலம் சரி செய்து விடலாம். அதே நேரத்தில் இந்த மருந்துகளை அதிகளவு எடுக்கும் போது செக்ஸூவல் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

பக்க விளைவுகள்
தாம்பத்ய ஈடுபாடுமின்மை ஆண்மை இழப்பு விறைப்புத்தன்மை குறைபாடு தாமதமாக விந்தணுக்கள் வெளியேறுதல் தாமதமான பாலியல் ஆசை பாலினம் சார்ந்த மாற்றங்கள் மனநல சுகாதார தேசிய நிறுவனம் நடத்திய ஆய்வின் படி மன அழுத்தம் ஆணை மட்டும் பாதிப்பதில்லை. பெண்களுடைய செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கிறது என்கிறது ரிப்போர்ட். இருபாலினமே தாம்பத்ய ஈடுபாடு இல்லாமல் இருக்கின்றனர்.

பெண்களுக்கான பாதிப்பு
மன அழுத்தம் பெண்களில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. மாதவிடாய் காலங்களுக்கு முன் மற்றும் பின் ஏற்படுதல், குழந்தை பிறந்த பிறகு, வேலைப்பளு, குடும்ப வாழ்க்கை போன்றவற்றால் எளிதில் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்களில் ஏற்படும் இந்த மன அழுத்தம் அவர்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் வலியையும் ஈடுபாடுமின்மை யையும் உண்டாக்கும். மேலும் இந்த மன அழுத்தம் யோனி பகுதியில் உடலுறவு மாற்றங்களை ஏற்படுத்த விடாது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதால் இவர்களால் ஒரு சந்தோஷமான செக்ஸ் வாழ்க்கையை தொடர முடியாது.

ஆண்களில் பாதிப்பு
ஆண்களில் இந்த மன அழுத்தம் பயம், குற்றவுணர்வு, சுய நம்பிக்கை இழப்பு, விறைப்பு செயலிழப்பு, முன்னரே விந்து வெளியேறுதல், தாம்பத்ய ஈடுபாடுமின்மை போன்ற செக்ஸ் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

ஆண்மையை அதிகரிப்பது எப்படி
உங்கள் மன அழுத்தத்தை குறைத்து ஆண்மையை மேம்படுத்துவதற்கு சில வழிகள் உள்ளன. அதை கடைபிடித்து வரலாம். இது உங்கள் மன நிலைமை மற்றும் உடல் வலிமையை மாற்றும்.

உதவி கோருதல்
முதலில் உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் இது குறித்து யாரிடமாவது பேசுங்கள். புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (சிபிடி) மற்றும் ஆன்டிடிப்ஸ்ரசன் மருந்துகள் பலனளிக்கும். இந்த சிபிடி சிகச்சை மூலம் வேண்டாத மன அழுத்த சிந்தனைகளை தடுத்து நமக்குள் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும். மேலும் மருத்துவரின் ஆலோசனை பேரில் ஆன்டிடிப்ஸ்ரசன் மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி உங்கள் உடலுக்கு வலிமையை தருவதோடு மனதையும் ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது. தினமும் உங்கள் துணையுடன் காலார நடந்து செல்லலாம். நடத்தல் உங்கள் மூளையில் எண்டோர்பின்ஸ்யை சுரக்க செய்கிறது. இந்த சந்தோஷ ஹார்மோன் உங்களை சுற்றி நேர்மறை சிந்தனையை உருவாக்கி நல்ல மனநிலையை தருகிறது. எனவே உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி சிறந்த ஒன்று.

பழங்கள்
மன அழுத்தம் இருந்தால் அதிகமாக பசிக்காது. எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 5 துண்டுகளாவது பழங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில் பழங்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

பாஸிடிவ் எண்ணங்கள்
இந்த நேர்மறை எண்ணங்கள் உங்கள் நிலைமையை மாற்ற சிறந்த சிகச்சை யாகும். நீங்கள் டாக்டரிடம் சென்றால் கூட சில நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளையும், ஆறுதல்களையும் சொல்லி அனுப்புவார்கள். இந்த நேர்மறை எண்ணங்கள் உங்கள் மன அழுத்தம் குறைய உதவியாக இருக்கும். எனவே நீங்களும் கூட நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு அதிலிருந்து வெளியே வர முற்படலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker