ஆரோக்கியம்புதியவை

உடலை சீராக்கும் உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்பது மனித உடலில் பல்வேறு பாகங்களை சீராக இயங்க வைக்க உதவும் சக்தியாகும். முக்கியமாக தசைகளை வலுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கை, கால், மார்பு, வயிறு, கழுத்து என்று உடலின் அனைத்து தசைகளையும் வலி, தசைப்பிடிப்பு போன்றவை வராமல் பார்த்துக்கொள்ள தொடர்ந்து சில உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

இயற்கையாகவே புது ரத்த நாளங்கள் உருவாக தூண்டுகோலாக இருப்பது தொடர்ந்து செய்து வரும் உடற்பயிற்சியே. உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு அது உங்கள் உடல் நலத்துக்கு உகந்ததா? என தெரிந்துகொள்ள வேண்டும். இருதய நோய், ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஏனெனில் முறைப்படி உடற்பயிற்சி செய்ய தவறினால் உடற்பயிற்சியே சிலருக்கு ஆபத்தை விளைவித்துள்ளதையும் அனுபவத்தில் பார்க்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker