சிலருக்குக் கண்களுக்குக் கீழ் படர்ந்துள்ள திட்டுகளை போக்கும் அழகு குறிப்புகள்
ஆரஞ்சு ஜூஸை வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.
பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். பின் படிப்படியாக உதடுகள் கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு மிக முக்கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்பதுதான்.
இந்த உஷ்ணத்தை போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும்.
இரவில் படுக்க போகும்போது வெண்ணையை உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு மீண்டும் பழைய பொலிவுக்கு வந்து விடும்.
முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.
பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும்.
வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் விழுது, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து உள்ளதோ அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு வாரம் இருமுறை செய்து வர கருமை ஓடிவிடும்.
கருவளையம் போக:
கண்களைச் சுற்றி பாதாம் ஆயில் தேய்த்தால் கரு வளையம் படிப்படியாக மறையும். மென்மையான, ரோஜா நிற இதழ்களைப் பெற கொத்தமல்லிச் சாறால் உங்கள் உதடுகளை அவ்வப்போது `மசாஜ்’ செய்யுங்கள்.
பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல் மென்மை பளபளப்பு கூடும்.
கழுத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க முட்டையின் வெள்ளைக் கரு, கிளிசரீன், ரோஸ்வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவுங்கள்.