அழகு..அழகு..புதியவை

கண்களை சுற்றி கருவளையம் போக வேண்டுமா அப்போ இதை செய்யுங்கோ

கண்களை சுற்றியுள்ள கருவளையம் உங்கள் முகத்தின் அழகையே கெடுத்து விடும். சிலருக்கு கருவளையம் இருந்தால் வீட்டை விட்டு வெளியில் வரவே கூச்சப்படுவார்கள். மன அழுத்தம், சத்து குறைப்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாதது போன்றவற்றால் கருவளையம் அதிகரிக்க செய்கின்றது. இதை தடுக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பதை பற்றி இதில் காணலாம்.

ரோஸ் வாட்டர் :

முகத்தை சுற்றி கருவளையம் வருவதற்கு நமக்கு தூக்கம் அதிகமாக இல்லாமல் இருப்பது மற்றும் மனா அழுத்தம் போன்ற காரணங்களால் தான். ஆனால் நம் கண்களை சுற்றி நம் பராமரிப்பு சரியாக இல்லையெனில் கருவளையங்கள் அப்படியே இருந்துவிடும். ஆண்கள் இதைப்பற்றி நினைக்கவில்லை என்றால் அவர்கள் கண்களுக்கு கீழே வீக்கம் போல் வந்துவிடும். இதை சரி செய்ய வழி உண்டு.
உங்கள் கண்களை சுத்தமான நீரால் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு ரோஸ் வாட்டரை ஒரு காட்டன் துணியில் நனைத்து உங்கள் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். தொடர்ந்து 5 நிமிடம் வரை நீங்கள் வைக்க வேண்டும். இதே போல் கருப்பு வளையங்கள் மறையும் வரை செய்து வந்தால் கண்களில் உள்ள வீக்கங்களுக்கு குறையும், கருவளையமும் மறையும்.

புதினா :

இது வாய்க்கு நறுமணத்தை தருவது மட்டுமில்லாமல், கண்களுக்கும் குளிர்ச்சியை தருகின்றது. புதினாவை சுத்தமாக கழுவிக்கொண்டு அதை நன்கு சிறிது தண்ணீரில் ஊற வைக்கலாம். பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்து அந்த புதினா நீரை ஊற்றி கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இதே போல் கொஞ்ச நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், கரு வளையங்கள் மறைந்துவிடும்.
ஆரஞ்சு பழத்தோல்:

ஆரஞ்சு பழத்தோலில் உள்ள நார் போன்ற பகுதியை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் வெள்ளரி அரைத்த நீரை சேர்த்துக் கொள்ளவும். பின்பு கண்களை மூடிக்கொண்டு பழத்தோலை கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இருவது நிமிடங்கள் கழித்து நீங்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
இதை கருவளையம் இல்லாதவர்கள் கூட பயன்படுத்தலாம். உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் ஒரு முறை இது. குறிப்பாக கணினி அதிகமாக பார்ப்பவர்கள் இந்த முறையை நீங்கள் உபயோகிக்கலாம்.
உருளைக்கிழங்கு:

அடுத்ததாக உருளைக்கிழங்கு கிழங்கு உங்களுக்கு நல்லதொரு தீர்வை தரும். உருளைக்கிழங்கை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நீரில் கெட்டியாக கலக்கிக்கொண்டு ஒரு காட்டன் துணியில் வைத்து ஒத்தடம் தரலாம். இதே போல் 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இதற்கு மாறாக உருளைக்கிழங்கு தோலை நன்றாக சீவி, அதை வட்டமாக வெட்டிக் கொள்ளலாம். பின்பு இதை உங்கள் கண்களுக்கு வைத்து விட வேண்டும். ஒரு 20 நிமிடங்கள் கழித்து இதை எடுத்து விட வேண்டும். இதே போல வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் உங்கள் கரு வளையம் காணாமல் போய்விடும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker