1. முதலில் உங்கள் சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்யவும். ஃபேஸ் கிரீமை இதற்கு பயன்படுத்தலாம். பொலிவான சருமத்தைப் பெற ஃபவுண்டேஷனைப் பூசவும். பிரஷ்ஷை இதற்குப் பயன்படுத்தலாம்.
2. கண்களுக்கு கீழ் இருக்கும் கரு வளையங்களை மறைக்க கன்சீலரைப் பயன்படுத்தவும். பிரஷ்ஷை பயன்படுத்தி கன்சீலரை நன்றாக பிளெண்ட் செய்யவும்.
3. கண்களுக்குக் கீழ் லூஸ் ட்ரான்ஸ் குளூசன்ட் (ஒளி ஊடுருவக்கூடிய) பவுடரை பூசி உங்கள் சருமத்தின் பேஸை செட் செய்துகொள்ளவும்.
4. பின்களைக் கொண்டு சுருள்களை செட் செய்து கொள்ளவும்.
5. கன்ன எலும்புகளின் மேல் காப்பர் பிளஷ்ஷைப் பூசவும். இதே நிறத்தை மூக்கு மற்றும் தாடைப் பகுதிகளில் பூசவும்.
6. புருவங்களை நன்றாக சீர் செய்ய வேண்டும். அந்தத் தோற்றத்தை எட்டுவதற்கு பிரஷ் செய்யவும்.
7. சாதாரண ஐலைனருக்கு பதில் பிங்க் நிறத்தில் லிக்விட் பிக்மென்ட்டை தேர்வு செய்யுங்கள். இது பிரைட்டான வித்தியாசமான தோற்றத்தைத் தரும். கிராஃபிக் ஸ்டைலை வரைய மெல்லிய பிரஷ்ஷைப் பயன்படுத்தவும்.
8. அதே பிங்க் பிக்மென்ட்டைக் கொண்டு டிசைனுக்குள்ளும் பூசவும்.
9. இந்த டிசைனுக்கு வெளியே கறுப்பு நிற ஐலைனரைக் கொண்டு அவுட்லைன் வரைந்தால், இதைத் தனித்துக் காட்டும்.
10. இரண்டு மூன்று முறை மஸ்காராவை அடர்த்தியாக பூசவும்.
11. பிரைட் பிங்க் நிறத்தோடு இந்த லுக்கை முடிக்கவும்.