ஆரோக்கியம்புதியவை

ஹார்மோன்களை கவனியுங்கள்

கிரேக்க சொல்லான ஹார்மன் என்பதில் இருந்து உருவான ஹார்மோன்கள் உடலுக்குள் ரசாயன செய்திகளின் தூதர்களாக விளங்குகின்றன. பாலியல் உறுப்புகள் மற்றும் பிட்யூட்டரி, பைனியல், தைமஸ், தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட சுரப்பிகளில் அவை உருவாகின்றன. இரத்த ஓட்டம் மூலம் குறிப்பிட்ட சில உறுப்புகள் மற்றும் திசுக்குள்ளும் செல்லும் இந்த ரசாயனம் வளர்ச்சி, இனப்பெருக்கம்,போன்ற நடவடிக்கைகளைஊக்குவிக்கும் வகையில் வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு அளவில் செயல்படுகின்றன.
ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை பாதித்து, பழக்க வழக்கங்களை மற்றலாம். இதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். “நம்முடைய உடல் சார்ந்த அம்சங்கள் மற்றும் குணாதிசயத்தை உருவாக்குவதில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்களில் ஈஸ்ட்ரோஜன் கூந்தல், சருமம், குரலின் தன்மையை தீர்மானிக்கிறது. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் தலைமுடி, குரல் மற்றும் சரும அமைப்பை தீர்மானிக்கிறது” என்கிறார் மும்பை பர்திங் ஹாஸ்பிடல், கன்சல்டண்ட் ஆப்ஸ்டெட்ரிசியன் எண் டோஸ்கோபிக் சர்ஜன், கியூரே ஜைய்னே, ஐவிஎப் மற்றும் டாக்டர்ரேகா தோட்டே.

பாலின பிரச்சனைகள்

பொதுவாக கருதப்படுவதற்கு மாறாக ஹார்மோன்கள் சுரப்பதில் எந்த பாலின வேறுபாடும் இல்லை என்கிறார், மும்பை கியூடிஸ் ஸ்கின் ஸ்டூடியோ சரும நல வல்லுனர் லேசர் சர்ஜன். டாக்டர் அப்ரதிம் கோயல் “ஹார்மோன் சுரக்கும் அளவில் தான் வேறுபாடு இருக்கிறது. தைராய்டு ஹார்மோன் கார்டிசால் மற்றும் செக்ஸ் ஹார் மோனான ஈஸ்ட் ரோஜன், புரோ ஜெஸ்ட்ரோன் மற்றும் டெஸ்டெஸ்டிரோன் இரு பாலர்களிடமும் உள்ளன. இவை ஆரோக்கியம் மற்றும் முக்கிய இயக்கங்களுக்கு அவசியம்” என்கிறார் அவர். வலைப்பதிவாளரும், தி ஹார்மோன்ஸ் ரீசெட் டயட் புத்தகத்தை எழுதியவருமான டாக்டர் சாரா காட்பிரைடு, ஆண்களில் உள்ள மூன்று முக்கிய ஹார்மோன்களான கார்டிசால், தைராய்டு மற்றும் டெஸ்டெஸ்டிரோன் ஆகியவற்றை தி திரி அமிகோஸ் என வகைபப்டுத்துள்ளன. பெண்களில் இதற்கு நிகரான சார்லீஸ் ஏஞ்சல்ஸ் என சொல்லக்கூடிய கார்டிசால், தைராய்டு, ஈஸ்ட்ரோஜன் ஆகியவை உள்ளன.

ஆண்மைக்கு

ஆண்களில் டெஸ்டெஸ்டிரோன் அதிக அளவில் உள்ளது. அவர்களின் இச்சை, பசி மற்றும் கனமான குரல் மற்றும் மீசை, தாடி ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக அமைகிறது. டாக்டர் கோயல் இந்த ஹார்மோன் பற்றி விவரிக்கிறார்: “விரைப்பை மற்றும் அட்ரினலில் இவை சுரக்கின்றன. வலு மற்றும் விந்தணுவுக்கு இவை பொறுப்பேற்கின்றனர். அடிர்னல் சுரப்பியில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜனும் ஆண்களிடம் குறைவான அளவு உள்ளது. வயதாகும் போது, டெஸ்டெஸ்டிரோன் அளவு குறைந்து, ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும் போது (எடை கூடுவதால் கொழுப்பு செல்கள் சிறிதளவு டெஸ்டெஸ்டிரோனை ஈஸ்ட்ரோஜனாக மாற்றுவதால் இது நிகழ்கிறது), களைப்பு உண்டாகி, ஆர்ரல், வலு மற்றும் இச்சை குறைகிறது. மேலும் இதய நோய், புரோஸ்டிரேட் உள்ளிட்ட நோய் அபாயமும் அதிகரிக்கிறது. புரோ ஜெஸ்டிரோன் அளவு பெண்களை விட ஆண்களில் குறைவாக இருந்தாலும், மனநிலையை அமைதியாக்குவது, தூக்கம் மற்றும் பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்துவது, கொழுப்பை சீராக பரவச்செய்வது ஆகிய அதே பணிகளை செய்கிறது”.

பெண்மைக்கு

யுவதிகள் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் கர்பமாவதற்கு தயாராகும் வகையில் அது கருப்பை சுவற்றை கெட்டியாக்குகிறது. கர்பம் தரிக்காத போது, இது மாதவிலக்கு மூலம் வெளியேறுகிறது. எனவே ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிலக்கிறகு முன் உச்சத்தை தொடுகிறது. ஓவரி, ஆட்ரினல் சுரப்பி மற்றும் கொழுப்பு செல்களில் இந்த ஹார்மோன் சுரக்கிறது. காலப்போக்கில் இது குறைகிறது. டாக்டர்கோயல் விளக்கிறார்: “மார்பகம், அந்தரங்கப்பகுதியில் மயிர் வளர்ச்சி அகியவற்றுக்கும், எலும்பு அடர்த்தி மற்றும் ஆரோக்கியமான கொலஸ்டார்ல் அளவை தக்க வைக்கவும் இந்த ஈஸ்ட்ரோஜன் உதவுகிறது”.
புரோஜெஸ்டிரோன் என்பது வளர்ச்சிக்கான ஹார்மோனாகும், ஈஸ்ட்ரோஜெனின் தேவையில்லா விளைவுகளை இது சம்நிலைப்படுத்துகிறது. மனநிலையை சீராக்கி, நல்ல தூக்கம் அளித்து, எரிச்சலை, உடல் பெருப்பதை குறைத்து,கொழுப்பை சீராக்குகிறது. மூன்றாவது ஹார்மோனான, டெஸ்டெஸ்டிரோன், பெண்களில் குறைவாகவே உள்ளது. அட்ரிலன் சுரப்பி மற்றும் ஓவரில் இது சுரக்கிறது. இது தசை பற்று, வலு, இச்சை, துடிப்பு ஆகியவற்றை உண்டாக்குகிறது. ஆனால், அளவுக்கு அதிகமானால் முகப்பரு, மாதவிலக்கு கோளாறு, கோபம், பி.சி.ஓ.எஸ் பாதிப்பு ஏற்படலாம்” ஈஸ்ட்ரோஜன் மூன்று வகையாக உள்ளன. ஓவரியில், கல்லீரல், கொழுப்பு செல்களில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் (இ1), ஓவரிகளில் உருவாகும் பீட்டா எஸ்ட்ராடியால் (இ 2) மற்றும் கர்ப காலத்தில் உருவாகும் இ3 ஆகும்.

கட்டுப்பாடுகள்

ஹார்மோன்கள் தங்களுக்கான கட்டளையை மீறாமல் சரியாக பணியாற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிக மிக அவசியம். ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக உருவாகும் போது அல்லது கட்டுப்பாடில்லாமல் செயல்படும் நிலையில், உடலில் சில அசாதரண விளைவுகள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக முகப்பரு, தலையில் வழுக்கை, பிள்ளைப்பேறு தவிர்த்த காலங்களில் பெண்களின் மார்பகக் காம்புகளில் பால் கசிவது, முகத்தில் மயிர் வளர்வது போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். பொதுவாக 30 மற்றும் 40 வயதிகளின் போது ஹார்மோன்கள் வரம்பு மீறி செயல்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர் கோயல் கூறுகிறார்.
“இந்தக் காலத்தில் வாழ்க்கை மற்றும் குடும்பம் பற்றிய கவலைகள் அதிகரிப்பதால் மன அழுத்தம் அதிகமாகிறது. மன அழுத்தம் நீடிப்பது, வளர்ச்சிக்கான புரோ ஜெஸ்டிரோன் ஹார்மோனை பெரியளவில் பாதித்து, பாலினத்திற்கு ஏற்ற ஹார்மோனின் தாக்கத்தை அதிக மாக்குகிறது. ஆக மனஅமைதி, தூக்கம் மற்றும் ஓய்வு குறைந்து, கார்டிசால் அதிகமாகிறது.போது இதனால், உடலில் அனைத்து செல்களும் மோசமாகிறது. தீவிரமான நிலையில் மருந்துகளின் உதவியை நாடலாம் என்றாலும் இவை ஒரே முறையில் தீர்வு அளிப்பதில்லை”

மன அழுத்தம் மட்டும் தான் முக்கியப் பிரச்சனை என்றால், அதைச் சீராக்கினால், வாழ்க்கை சீராகும்.அதற்காக, அவர் நன்றாக நீர் அருந்துதல், முட்டை, நட்ஸ், சீஸ் ,டார்க் சாக்லெட் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி, யோகா செய்வது நல்லது” என்கிறார் டாக்டர் கோயல்.ஆனால், சிறிய அளவில் துவக்கலாம். உணவு பழக்கத்தை சீராக்கி, உடற்பயிற்சியையும் வழக்கமாக்கி கொள்ளலாம். உடலின் உயிரியல் கடிகாரம் சீரானால் மற்ற எல்லாம் சரியாகிவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker