ஃபேஷன்புதியவை

சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்கான சிங்கார ஆடைகள்

பெண் குழந்தைகளுக்கான ஆடைகளில் அன்றாடம் புதிய வரவுகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. எத்னிக் உடைகள், பார்ட்டி உடைகள் போன்றவற்றிக்கு என்றுமே தனி மவுசுதான்.

பார்ட்டி உடைகளில் கவுன்களும், லாங் ஃப்ராக்குகளும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

* ஒன் ஷோல்டர் சீக்வின் எம்பிராய்டர்டு கவுன்கள்:

இந்த கவுன்களில் இருக்கும் ஒரு கைக்கும், கவுனின் கீழ்புறம் சுற்றிலும் ஃபிரில்கள் இணைக்ககப்பட்டு, இடுப்புப் பகுதியில் லேசானது இணைக்கப்பட்டு, ஜிப்பானது பக்கவாட்டில் பொருத்தப்பட்டு, பூக்கள் சீக்வின் எம்பிராய்டரி வேலைப்பாடு உடல் முழுவதும் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கவுன்கள் மென்மையான நிறங்களில் பார்ப்பதற்கு அம்சமாகவும், அழகாகவும் உள்ளன.

ஆர்கன்ஸா, காட்டன் மற்றும் ஷேட்டின் துணிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கவுன்கள் ஒரு வயது குழந்தை முதல் பதினோரு வயது குழந்தைகளுக்கேற்ற பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இவை பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிய ஏற்ற ஆடைகளாக உள்ளன.

விஸ்கோஸ் எம்பிராய்டரி நெட் கவுன்கள் இந்த கவுன்கள் பெரும்பாலும் நெட்டட் முழுக்கைகள் அல்லது கைகளே இல்லாமலும் வடிவமைக்கப்படுகின்றன. மார்பிலிருந்து கழுத்துப்பகுதியானது நெட்டட் துணியில் கழுத்தைச்சுற்றிலும் அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் தைக்கப்பட்டுள்ளன. உடலின் மேற்பகுதியில் கவுனானது உடலைப் பிட்டித்தவாறு சிக்கென்றும் இடுப்பிலிந்து குதிங்கால் வரை ஃப்ளேர்களுடனும், ஷேட்டின் துணியின் மேல் நெட்டில் எம்பிராய்டரி செய்யப்பட்ட மற்றொரு லேயரானது இணைக்கப்பட்டு மிகவும் பிரமாதமாக காட்சியளிக்கின்றது.

இவ்வகைக் கவுன்களிலும் இரண்டு வயது முதல் பதினான்கு வயதுவரை பெண் குழந்தைகள் அணிந்து கொள்வதற்கு ஏற்றாற்போல் பல்வேறு அளவுகள் உள்ளன. இவை வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு அணியஏற்றவையாக இருக்கும்.

*ஸ்லீவ்லெஸ் கவுன்களுடன் வரும் போன்ச்சோ:-

ஷேடின் அல்லது சில்க் துணியில் கைகளில்லாமல் எளிமையான டிசைன்களில் தைக்கப்படும் கவுன்களின் மேலே கழுத்திலிருந்து மார்பு வரை மறைக்கும் மேலாடையே போன்ச்சோ என்று அழைக் கப்படுகிறது. இவ்வகை போன்ச்சோக்கள் பலவித வண்ணங்களில் தனியாகவும் விற்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வண்ணங்களில் இவற்றை வாங்கி வைத்துக் கொண்டோமானால் அவற்றை வெவ்வேறு கவுன்களின் மேல் மிக்ஸ் அண்டு மேட்ச் செய்து அணிந்து கொள்ளலாம்.

* ஹால்ட்டர் கழுத்துடன் வரும் கவுன் கள்:-

இவை பார்ட்டிகளுக்கும், வரவேற்பு விழாக்களுக்கும் அணிய ஏற்றவையாக இருக்கும். இவ்வகை ஆடையில் மார்பிலிருந்து கணுக்கால் வரை உட்புறம் லைனிங் கொடுத்து மேற்புறம் உள்ள துணியானது வயிற்றுப்பகுதியிலிருந்து ‘A’ வடிவில் பிரிந்து பின்புறம் தரையில் புரள்வது போல் மிகவும் கச்சிதமாக வடிவமைக்ப்பட்டிருக்கும். இடுப்பை இருக்கி பிடிக்கும் விதமாக அழகிய இடுப்பு பட்டைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். மேல் கழுத்திலிருந்து கழுத்தைச்சுற்றிலும் அழகிய வேலைப்பாடுகள் துணியில் செய்யப்பட்டிருக்கும். முன்புற கழுத்தில் இருந்து மெல்லிய துணியானது இணைக்கப்பட்டு அது மார்பை அந்தக் கவுனின் மேற்புறம் மறைப்பது போல் வடிவமைக்கபட்டிருக்கும்.

ஏழு, எட்டு வயதிலிருந்து பெரிய வயது பெண் குழந்தைகள் இந்த கவுனை அணியும் பொழுது அது அவர்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாகவே உள்ளது.

* ஷாப்ஃப் குர்த்தி மற்றும் டோத்தி சல்வார்:-

இது பெண் குழந்தைகளுக்கு ஏற்ற நவீன இணைவு உடை என்று சொல்லலாம். இது நவநாகரீகமாகவும் அதே சமயம் பாரம்பரியமான தோற்றத்தைத்தருவதாகவும் உள்ளது. மேலாடையானது ஸ்லீவ்ரெஸ் ஷார்ட் குர்த்தி அதன் கீழ்புறம் ஃபிரில்கள் வைத்து பார்க்க அழகாக உள்ளது. கீழாடையானது பஞ்சகச்சம் போல் அதிக ஃபிளிட்ஸ்களுடன் கூடிய பேன்ட்டாகும். இநத ஆடைகள் அனைத்து விதமான சமயங்களிலும் அணிய ஏற்றவையாக உள்ளது.

* டங்கரீஸ்: இது சாதாரணமான அதே சமயத்தில் நேர்த்தியான உடையாக உள்ளது. இவை சாதாரண துணிகளிலும் பெரும்பாலும் டெனிம் துணிகளிலும் கிடைக்கின்றன. இவை பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என இருபாலரும் அணிவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டங்கரீ உடையை டி-ஷர்ட் மற்றும் ஷர்ட்டுடன் அணிந்துகொள்ளலாம். இவை முழுக்கால் மற்றும் அரைக்கால், முக்கால் கால்வரை இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

* ஃப்ளவர் டிரஸ்:- இவை ட்யூலி ரகத்துணியால் வடிவமைக்கப்படும் ஆடையாகும். இந்த ஃப்ராக்கில் கைகளில்லாமல் வெறும் தோள்பட்டையை மறைப்பது போல் லேஸ் துணிகளில் மலர்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன இடுப்பை சுற்றிலும் அழகிய கற்கள் பதித்தோ அல்லது தோள்பட்டையில் இருக்கும் மலர்களைப் போன்றே இடுப்பைச்சுற்றிலும் பட்டைகள் அமைக்கப் பட்டு அணிந்துகொள்ளும் சிறு பிள்ளைகளுக்குவசதியாகவும் நேர்த்தியான தோற்றத்தைத்தருவதாகவும் உள்ளன.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker