தற்காப்பு கலை உடற்பயிற்சி
உடல்தகுதி பயிற்சி கூடங்களை விட குறுகிய காலத்தில், கேளிக்கையுடன் கூடிய உடல்கட்டுமான பயிற்சியுடன் வாகன கடத்தல், ஆள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் சமாளிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
க்ராவ் மாகா குத்துசண்டை, கால்குத்து சண்டை, வலுதூக்குதல் போன்றவற்றுக்கும் உங்கள் தசை தன்மை, இதய தசைநார்களின் வலு மற்றும் உடலுறுதியை மேம்படுத்துகிறது. இதனால் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் விரைவாக முடிவு எடுத்து செயல்படவும் முடிகிறது. அதோடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகள், கைப்பை, பெர்ஃபியூம் போன்றவற்றை கொண்டே தற்காத்து கொள்வதற்கான வழிகளை இந்தக் கலை நமக்குக் கற்றுத் தருகிறது.
இடம்
அதிக இடத்துடன் தனியாக இருக்கும் அறை தேவை. ஏனென்றால், குத்துசண்டை பைகளுடன் உதவியாளர்களும் இதற்குத் தேவை.
தேவைப்படும் நேரம்
நாற்பத்தைந்து நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஒதுக்குங்கள்.
எத்தனை முறை
நீங்கள் தினமும் செய்யும் மற்ற உடற்கட்டு பயிற்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு நாள் இடைவேளை விட்டு செய்ய வேண்டும்.
தேவைப்படும் கருவிகள்
பாய், குத்துச்சண்டை பைகள்
சுயமாகச் செய்யுங்கள்
தற்காத்துக் கொள்ளும் முறைகள், காலால் உதைத்தல், தடுத்தல், கை மூட்டு, கால் மூட்டு கொண்டு அழுத்தமாகத் தள்ளுவது போன்றவை இதில் அடங்கும். நிழலைப் பார்த்து குத்து சண்டையிடுதல், கருவிகள் இல்லாமல் செய்யும் பயிற்சிகளை நீங்கள் தனியாகச் செய்யலாம். மற்றவற்றை செய்ய உங்களுக்கு இரண்டு உதவியாளர்கள் அவசியம் தேவை.
என்ன சாப்பிடலாம்
உங்கள் உணவு சமச் சீராக இருந்தால் எதையும் தவிர்க்கத் தேவையில்லை.
கவனத்தில் கொள்ளவும்
பயிற்சியாளரிடம் உங்கள் மருத்துவப் பின்னணியைப் பற்றி தெரிவிக்கவும். குறைந்த, உயர்ந்த அழுத்தம், கீல் மூட்டு வலி, முழங்கால், முதுகுத் தண்டு பிரச்சினை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பயிற்சி கால அளவு
பயிற்சி வகுப்புகளை பொருத்தது.