புதியவைவீடு-தோட்டம்

வெங்காயத்தை ஏன் தோலுரிச்சு ஃப்ரிட்ஜ்-ல வைக்கக்கூடாது தெரியுமா?

வெங்காயத்தை ஏன் தோலுரிச்சு ஃப்ரிட்ஜ்-ல வைக்கக்கூடாது தெரியுமா?

அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் ஓர் முக்கியமான பொருள் தான் வெங்காயம். காய்கறிகளிலேயே வெங்காயம் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டது. அதோடு இது குழம்பு, சாம்பார் போன்றவற்றிற்கு ஒரு நல்ல அமைப்பை தரக்கூடியது. இத்தகைய வெங்காயம் நல்ல சுவையைக் கொண்டிருப்பதோடு, வலுவான வாசனையையும் கொண்டது.

தற்போது அனைவரது வீட்டிலும் ஃப்ரிட்ஜ் உள்ளது. இதனால் பலரும் தங்களின் சமையல் வேலையை சுலபமாக்குவதற்கு ப்ரீயான நேரத்தில் வெங்காயத்தை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வார்கள். ஏனெனில் சமைக்கும் போது வெங்காயத்தை, குறிப்பாக சின்ன வெங்காயத்தை உரித்து வெட்டுவதற்கு நேரமாகும். ஆகவே பலரும் இம்மாதிரி வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்வதுண்டு. ஆனால் வெங்காயத்தை தோலுரித்து ஃப்ரிட்ஜில் வைப்பது பாதுகாப்பானது தானா? ஏன் வெங்காயத்தை வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெங்காயத்தை ஏன் வெட்டி ஃப்ரிட்ஜில் வைப்பது சிறந்தது அல்ல?
வலுவான வாசனை மற்றும் சுவையைக் கொண்டதால், வெங்காயம் சமையலுக்கு நல்ல சுவையை சேர்க்கக்கூடும். ஆனால் வெங்காயத்தை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால், அது ஃப்ரிட்ஜின் உள்ளே ஒரு கெட்டவிதமான துர்நாற்றத்தை உருவாக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளது மற்றும் பல மருத்துவ குணங்களும் உள்ளன. அதோடு இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்ததுள்ளன.
கிருமிகள் பெருகும்
வெங்காயம் எவ்வளவு தான் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், அதை தோலுரித்து வெட்டி ஃப்ரிட்ஜில் வைப்பது சிறந்த யோசனை அல்ல. ஏனெனில் வெங்காயத்தின் தோலுரித்து வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, அது சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளால் எளிதில் மாசுபடுத்தப்படலாம். மேலும் இது நோய்க்கிருமிகளின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுத்து, நினைப்பதை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
வெங்காய செல்கள் சீர்குலையும்
வெங்காயத்தை வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதற்கான மற்றொரு காரணம், வெங்காயத்தின் தோலுரித்து வெட்டும் போது, வெங்காயத்தின் செல்கள் சீர்குலைந்து சாறுகளை வெளியிடும். இந்த சாறுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குளிர்ச்சியான காற்றில் நீண்ட நேரம் வெளிப்படும் போது, அது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சுவை இழந்து வாடிவிடும்
ஒருவேளை வெங்காயத்தை உரித்து ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, ஃப்ரிட்ஜில் உள்ள ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த வெப்பநிலை, வெங்காயத்தின் சுவையை இழக்க வைத்து, வாடச் செய்துவிடும். வெங்காயம் வாட ஆரம்பித்தால், அதில் நோய்க்கிருமிகள் உருவாக ஆரம்பித்து, அதில் உள்ள ஊட்டச்சத்து அளவு குறைந்து, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடும்.
நிபுணர்களின் கருத்து
நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தை உரித்து வெட்டி ஃப்ரிட்ஜில் வைப்பது சிறந்த யோசனை அல்ல. உங்களுக்கு வெங்காயத்தை முழு சத்தும் கிடைக்க வேண்டுமானால், வெங்காயத்தை உரித்த உடனேயே பயன்படுத்த வேண்டும்.
வெங்காயத்தை எப்படி ஃப்ரிட்ஜில் சேமிக்கலாம்?
* யு.எஸ்.டி.ஏ-யின் படி, வெங்காயத்தை 40 டிகிரி பாரன்ஹீட் அல்லது குளிர்சாதன பெட்டியின் உள்ளே 4.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சீல் வைத்த கொள்கலனில் வைப்பதே சிறந்த வழியாகும்.
* வெங்காயத்தை சேமிப்பதற்கான மற்றொரு வழி, உரிக்கப்படும் ஒவ்வொரு வெங்காயத்தையும் உலர்ந்த டிஸ்யூ பேப்பரால் மூடி வைக்க வேண்டும். இதனால் இது காற்றில் ஈரப்பதத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை குறைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker