ஆரோக்கியம்புதியவை

இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். வாழைப்பழம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதில் இருக்கும் இரும்பு சத்து ரத்தசோகையை எதிர்த்து போராட உதவும். உடல் எடையை சீராக வைத்திருக்கும் திறனும் வாழைப்பழத்திற்கு உண்டு. இதயம் மற்றும் கண்களையும் பாதுகாக்க துணைபுரியும். ஆனாலும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. அந்த சமயத்தில் சாப்பிடுவது சளியை அதிகரிக்கச்செய்துவிடும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சோர்வான தசைகளை வலுவாக்க உதவும். அதனால் மாலை வேளையில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது இரவில் நன்றாக தூங்குவதற்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள், “ஒரு வாழைப்பழத்தில் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. அது நமது உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் 10 சதவீதத்தை வழங்குகிறது” என்கிறார்கள்.

ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளன. ஒருவேளைக்கு 500 கலோரிகளுக்கும் குறைவாக சாப்பிட விரும்பினால், இரண்டு வாழைப்பழங்கள் மற்றும் ஒரு கப் பால் பருகலாம். இரவில் காரமான உணவை சாப்பிடுபவர்கள் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்புண்ணை குணப்படுத்த உதவும். இனிப்பு பலகாரங்களை சாப்பிட விரும்பினால் அதற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிடலாம். அதில் இருக்கும் வைட்டமின்களும், நார்ச்சத்துக்களும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். வாழைப்பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, மேலும் நல்ல தூக்கத்தையும் தரும். அதே நேரத்தில் ஆஸ்துமா, சைனஸ், சளி தொந்தரவு இருப்பவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker