ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

சாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க…

நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நாம் மேற்கொள்ளும் உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அனைத்து வகையான சத்துகளும் சீராக இருப்பதுபோல அமைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

குழந்தைகளுக்கு எனில், அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க வேண்டும். முதியவர்கள் எனில், அவர்களின் செரிமானம் மற்றும் தேவைப்படும் சத்துகள் உள்ள உணவுகள் தயார் செய்து தர வேண்டும்.

என்ன வகையான உணவு உணவு சாப்பிட்டாலும், தண்ணீர் குடிப்பது தவிர்க்க முடியாதது. பலர் ஏசி அறைகளில் வேலைப் பார்ப்பதால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். எப்போதாவது தோன்றும்போது தண்ணீர் குடிக்கின்றனர். இது சரியான பழக்கம் அல்ல.

இயல்பான மனிதர் ஒருவர் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். பலர் வேலை மும்முரத்தில் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடுகின்றனர். பெண்கள் வெளியில் செல்லும்போது கழிவறை தேடி அலைய முடியாது என தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. சராசரி உடலில் தண்ணீரின் அளவு சீராக இருக்க வேண்டும்.

பலருக்கு தண்ணீர் குடிப்பதிலும் சந்தேகங்கள் எழும். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா என்று தோன்றும். பெரும்பாலான மருத்துவர்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க சொல்கிறார்கள். அப்படிக் குடிக்கும்பட்சத்தில் உணவின் அளவு குறைந்துவிடும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் சிலர் அதிகம் சாப்பிட்டு விடக்கூடாது என்பதாக, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பார்கள். ஆனாலும் இதை ஒரு மருத்துவரின் அறிவுரை கேட்டபிறகே முடிவெடுக்க வேண்டும். தானாக இந்தப் பயிற்சியை மேற்கொள்ள கூடாது.

அதேபோல, சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கலாமா என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. இதையும் தவிர்க்கவே மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படிக் குடித்தால் செரிமான பிரச்னைகள் ஏற்படும்.

உணவை உமிழ்நீரோடு நன்கு மென்று சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் தேவை வராது. அதற்காக விக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்படியான நேரங்களில் மிகக் குறைவான அளவு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.

அதேபோல சாப்பிட்டு முடித்தவுடனே கடகட என்று தண்ணீரைக் குடிக்காது, 15 – 20 நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்வது நல்லது. அதாவது சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும், சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

மற்ற நேரங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் குடிப்பதைப் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வேலை நேரத்தில் எழுந்து செல்ல முடியாது என்பவர்கள். ஒரு பாட்டிலில் தண்ணீரை அருகில் வைத்துக்கொள்வது நல்லது. அது பிளாஸ்டிக் பாட்டிலாக இல்லாமல் எவர்சில்வர் பாட்டிலாக இருப்பது நல்லது.

முடிந்தளவு உடலில் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் குடிப்பது என்கிற நிலைமைக்கு கொண்டு செல்லாதீர்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

குடிப்பது நல்ல தண்ணீராக என்று செக் பண்ணிக்கொள்வது நல்லது. சில இடங்களில் தண்ணீர் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறங்களில் வரக்கூடும். அவர்கள் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை வாங்கிக்கொள்வது நல்லது. அக்கருவி வடிகட்டி சுத்தப்படுத்தி தரும் நீரைக் குடிக்கலாம்.

சிலருக்கு மருத்துவர்கள் தண்ணீர் குடிப்பதில் சில வழிகாட்டல்களைச் சொல்லியிருப்பார்கள். அவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் அறிவுரைப்படி நடப்பதே நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker