உறவுகள்புதியவை

உடலில் சுரக்கும் ‘காதல் ஹார்மோன்’

காதலிக்கும் பெண்ணை பார்க்கும்போது இளைஞனின் உடலில் ஒருவித பதற்றமும் தவிப்பும் ஏற்படும். இரவில் அவளையே நினைத்தால் தூக்கம் கெடும். உடலுக்குள் ஒருவித கிளர்ச்சி உருவாகும். எப்போதும் அவள் நினைவே வந்து பசியை குறைக்கும். ‘தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. தனக்கு விடியலும், உற்சாகமும் அவள்தான். அவளை பார்த்தே ஆகவேண்டும்’ என்று புலம்ப வைக்கும்.

காதலித்த அனைவரும் இந்த தவிப்பை உணர்ந்திருப்பார்கள். இந்த தவிப்பு அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள்தான்.

காதலியை பார்த்ததும் பரவசத்துடன் கூடிய பதற்றத்தை உருவாக்குபவை அட்ரினலின், கார்டிசால் ஆகிய ஹார்மோன்கள். இரவில் காதலியை நினைத்து தூக்கத்தை இழக்கவைப்பது டோபமைன் ஹார்மோன். செரோடோனின் சுரக்கும்போது உடலில் ஏக்கமும், தவிப்பும் தோன்றும். காதலியை பார்க்கும்போது ஈஸ்ட்ரோஜனும், டெஸ்டோஸ்டிரானும் சுரந்து இச்சையை உருவாக்கும். ஆக நீங்கள் காதலில் விழுந்துவிட்டால் இத்தனை ஹார்மோன்களும் அவ்வப்போது சுரந்து உடலுக்குள் ஏகப்பட்ட கலாட்டாக்கள் செய்யும்.

வெளிப்படையாக காதலிக்கு வழங்கும் முத்தம் காதலனின் உடலுக்குள் பல ரசாயன மாற்றங்களை நிகழ்த்தும். டோபமைன், செரோடோனின், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் உதடுகள் இணையும்போது சுரக்கின்றன. இதனால் கண்கள் செருக காதலர்கள் தன்னை மறப்பார்கள்.

டோபமைன் அதிகமாக சுரந்தால் புல்லரிக்கும் உணர்வு ஏற்படும். செரோடோனின் அதிக அளவு சுரந்தால் கிறங்கிப்போவார்கள். தழுவலின்போது சுரப்பது ஆக்ஸிடோசின். முத்தம் இன்னும் சூடாக இருந்தால் ஆக்ஸிடோசின் அளவு அதிகரித்து காதலின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். ஆக்ஸிடோசின் சிந்திக்கும் ஆற்றலை கட்டுப்படுத்தக் கூடியது.

காதல் ஜெயித்து திருமணத்தில் இணைந்த பின்பு தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளும்போது உடலில் ஆக்ஸிடோசின் ஹார்மோன் அதிகரிக்கிறது. இதுதான் தம்பதியரின் பிணைப்பை வலுவாக்குகிறது. உறவின்போது ஆண்களின் உடலில் சுரக்கும் மற்றொரு ஹார்மோன் வாஸோபிரெசின் எனப்படும். இது துணையை பாதுகாப்பது தனது பொறுப்பு என்ற அக் கறையை உருவாக்கும்.

பெண் கருவுற்றிருக்கும்போது அவரிடம் இருந்து பேரோமோன் எனப்படும் தூண்டுபொருள் வெளிப்படும். இது கணவரின் மூளையில் புரோலாக்டினை சுரக்க செய்கிறது. இது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை மீது அதிக பாசம் கொள்ளச்செய்கிறது

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker