ஆரோக்கியம்புதியவை

உடல் எடை, கொழுப்பை குறைக்கும் ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர்

வெண்டைக்காயை ஜூஸ் பருகினால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுபோல் வெண்டைக்காயை தண்ணீரில் வெறுமனே ஊறவைத்து அந்த தண்ணீரையும் பருகி வரலாம். அப்படி பருகுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரலாம், கொழுப்பை குறைக்கலாம். நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.

வெண்டைக்காயில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றவை உள்ளன. அதனால் வெண்டைக்காய் நீரை தினமும் பருகுவதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச் சினைகளில் இருந்து விடுபடலாம்.

* வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பல பொருட்கள் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்க நம் உடலுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இது கணையத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. இன்சுலின் குறைபாடு காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கணையத்தில் பீட்டா செல்களை மேம்படுத்துவதற்கு வெண்டைக்காய் உதவுகிறது. இதனால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

* வெண்டைக்காய் தண்ணீரை தவறா மல் பருகினால் உடலுக்கு உற்சாகம் அளிக்கும் எனர்ஜி பானங்கள் பருகத்தேவையில்லை. இந்த நீரில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அதனால் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படலாம். அடிக்கடி உடல்சோர்வு, சோம்பல் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகிவரலாம்.

* வெண்டைக்காயில் நீரிழிவு மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைய உள்ளன. அவை முக்கிய உடல் உறுப்புகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி விகிதத்தையும் குறைக்கும். புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் வெண்டைக்காய் தண்ணீர் பருகுவது நன்மை பயக்கும்.

* வெண்டைக்காய் தண்ணீரை எளிதாக தயாரிக்கலாம். நான்கு, ஐந்து வெண்டைக்காய்களை நன்கு கழுவி அவைகளை சிறு துண்டு களாக வெட்டிக்கொள்ளுங்கள். பின்னர் அவைகளை வாய் அகன்ற ஜாடியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். ஜாடியின் வாய் பகுதியை மெல்லிய துணியால் மூடி இரவு முழுவதும் வெண்டைக்காயை ஊற வையுங்கள். பின்பு வெண்டைக்காயை உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி அந்த நீரில் கலந்து பருக வேண்டியதுதான்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker