இன்றைய ட்ரெண்டில் பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களில் நகங்களை அழகு படுத்தும் கருவிகள் வந்து விட்டது என்று நமக்கு தெரிந்த ஒரு ஒன்று. அதிலும், அந்த அந்த சீசனிற்கு ஏற்ற நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. சிவப்பு, பிங்க் மற்றும் வேறு சாதாரண நிறங்கள் பழைய ஸ்டைல் ! நாங்கள் உங்களுக்கு இப்போதைய ட்ரெண்டில் இருக்கும் சில பாப் கலர்ஸ் மற்றும் அதற்கேற்ற நெய்ல் ஆர்ட் வகைகளை அளிக்கிறோம். உங்கள் நகங்களின் விளையாட்டை ஆன் – போயிண்டில் வைத்து மகிழுங்கள்!!
டெலிகேட் டெய்சி –
இது ஒரு ஃபுளோறல் டச் குடுக்கும் அளவிற்கு ஒரு எளிமையான கலர் காம்பினேஷன். நீங்கள் இது போன்ற இரண்டு நிறங்களை சேர்த்தால், எந்த நிறத்தோடு எந்த மற்றோரு நிறம் ப்ளேன்ட் ஆகும் என்று தெரிந்து வைப்பது நல்லது.பெஸ்டெல் ஷேட்ஸ் நம்மை விட்டு விலகாத அளவிற்கு இனொரு நிறம் உங்களுக்காக. பனி காலம் முடிந்து கோடை காலங்களில் அணிய இது ஒரு சிறந்த நிறம்.
க்ளோஸி இங்க் ப்ளூ –
இப்போதைய ட்ரெண்டில் இருக்கும் நிறம் இதுதான். பளுவற்ற ப்ளூவும் இல்லாமல், இருண்ட ப்ளூவும் இல்லாமல், இது ஒரு நடு நிறம் . இது உங்களின் தைரியமான தோற்றத்தை வெளிப்படுத்தும் நிறம் ஆகும்.
மெட்டாலிக் ஷேட்ஸ் –
அப்போதும், இப்போதும் .. எப்போதும் ட்ரெண்ட்டில் இருக்கும் என்றால் அது மெட்டாலிக்! எனக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று! இதில், மெட்டாலிக் சில்வர், பிரான்ஸ், கோல்ட் மற்றும் பல நிறங்களிலும் உள்ளது.இது உங்கள் பாசி (தீஷீssஹ்) தோற்றத்திற்கு ஏற்ற ஒன்று.
ஃபுளோறல் டச் –
இந்த நெய்ல் ஆர்ட் எங்களை மிகவும் ஈர்க்கவைத்ததில் ஒன்று! இதில் இவரின் பாயிண்ட்டெட் ஓவல் ஷேப்பில் இருக்கும் நகங்களில் (ஸீணீவீறீ) இருந்து ஆரம்பித்து, இந்த ஃபுளோரெசென்ட் மஞ்சள் நிறம்,அதற்கு மேல் அந்த பூக்களின் வரையறுக்கப்பட்ட கலை மிக அற்புதமாக அமைந்துள்ளது. மஞ்சளில் நிறைய ஷேட்ஸ் இருந்தாலும் இது ஒரு இனிமையான தோற்றத்தை அளித்திருக்கிறது.
டஸ்கி ப்ளூ –
சதுர வடிவில் இருக்கும் இந்த நகங்களில் இந்த டஸ்கி ப்ளூ நிறம் மிக அருமையாக இருக்கிறது. இதை நீங்கள் பொதுவாக எந்த உடைகளிலும் அணிந்து செல்லலாம். இதன் சிறப்பு – இதில் இருக்கும் மூன்று விதமான தோற்றங்களே! ஒரே நிறம் ஆனால் இதில் ஒரு மேட் , ஒரு க்ளோஸி மற்றும் ஒரு ஷிம்மர் இருக்கிறது. குறிப்பு எடுத்தீர்களா?
femina
ஒலிவ் கிறீன் –
ஓவல் ஷேப்பில் இருக்கும் இந்த நகங்களில் இந்த ஒலிவ் நிற நக போலிஷ் ஒரு அட்டகாசமான தோற்றத்தை அளித்திருக்கிறது! எப்போதும் நான்கு விரல்களுக்கு ஒரே நிறத்தை அடிக்காமல், இது போல நைல் ஆர்ட் ஒன்றை முயற்சி செய்யுங்கள்.இதில் உங்கள் கற்பனை திறமைக்கு எல்லையே இல்லை என்பதே நிஜம் !
பெஸ்டெல் பர்புள் –
இதுவும் ஒரு மலரின் நிறம் போலவே மிக அற்புதமான ஒரு நிறம். இது உங்கள் விரங்களுக்கு நிச்சயம் ஒரு இனிமையான தோற்றத்தை அளிக்கும். இந்த நிறம் ஒரு மென்மையான ஆளுமை தோற்றத்தை உருவாக்குகிறது.
நுட் நிறம் –
எதிலும் ஒரு நுட் நிறம் இருப்பது சாதாரணம். நுட் பவுண்டேஷன், நுட் லிப்ஸ்டிக் போலவே நுட் நக போலிஷ்! இதிலும் நீங்கள் உங்கள் கற்பனை திறனை காட்டும் அளவிற்கு உள்ளது இந்த நுட் நிறம் கொண்ட நகங்கள்.
ப்ளூ ஹார்ட் –
ஆம்! நாங்கள் சிவப்பில் மட்டும் இல்லை, ப்ளூ நிறத்திலும் இந்த காதலர் தினத்திற்கு ஹார்ட் வரைய இருக்கிறோம்.இனி சிவப்பு ஹார்ட்டை மறந்துவிடுங்கள் !! இந்த ஸ்கை ப்ளூ மற்றும் வெள்ளையில் ஒரு ஹார்ட் கலவை நவீன காதலர்களின் அடையாளம்!